வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவியுலகப் பூஞ்சோலை -1-12-16

கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....

01.12.2016 நாளாம் தகிடு தத்தம் வெளியானதோ தலைப்பு போட்டிக் கவிதையில், சிறப்பான கவிப்படைத்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சரஸ்வதி ராஜேந்திரன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணதாசன் சான்றிதழ் - 4
தம்பியென்றும் பாராமல் தகிடுதத்தம் செய்து
தப்பென்று தெரிந்தும் அவன் பங்கையும் சுட்டேன்
அடுத்தவள் வாழ்வதை பொறுக்காமல் தப்புத் தப்பாய்
அவள் கணவனிடம் போட்டுக்கொடுத்து தகிடுதத்தம்
வேண்டாத மருமகளை வேண்டுமென்றே தகிடுதத்தம் செய்து
வேண்டாதவளாகவே வெளியேற்றினேன்
நல்லவள் என்று தெரிந்தும் காய்கறிக்காரியிடம் தகிடுதத்தம்
பொல்லாத்தனமாய் ஏமாற்றி அக்கிரமம்
பொறாமை குணத்தால் எதிர் வீட்டுபெண்ணின் திருமணத்தில்
பொல்லாததையும் இல்லாததையும் சொல்லி கெடுத்தேன்
நான் செய்த சூட்சமங்கள் தகிடுதத்தங்கள் எல்லாம்
தானாக வெளியாகி தூற்றப்பட்டேன் தூக்கியெறியப்பட்டேன்
அடாது புரிவர் அடாது பெறுவர் என்பது கண் கூடு
துரோகத்தைச் செய்தால் துயருவர் நிச்சயம்
கறை பட்டோர் எல்லாம் குறை பட்டே வாழ்வர்
தகிடுதத்தம் செய்வோர் ததுங்கினத்தோம் போடுவார் இறுதியில்
அனைவரிடமும் அன்பு செய்து வாழ்தலே அறிவுடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக