சனி, 31 டிசம்பர், 2016

நானா எனக்குள் நானா -சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா 15-12016

இனிய காலை வணக்கம் கவிஞர்களே....
சங்கத் தமிழ் கவிதைப் பூங்காவில் 15.12.2016 அன்று நடைபெற்ற "நானா எனக்குள் நானா" என்ற தலைப்பில் நடைபெற்ற பாரதிதாசன் சான்றிதழ் போட்டியில் நடுவர்களாக கலந்து சிறப்பித்து சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
நடுவர் கவிஞர்
ந.பாண்டியராஜன்
நடுவர் கவிதாயினி
சரோஜினி பாண்டியராஜன்

வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள் சங்கத் தமிழ்க் கவிதை குழுமம்
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்
நானா எனக்குள் நானா -தலைப்பு
நானா எனக்குள் நானா இல்லை
யாரோதானா யோசிக்கிறேன்
கூப்பிய கரங்களுக்குள்
கொடுவாளை மறைத்து வைக்கவில்லை
முகவரிக்காக யாரையும்
முகஸ்துதி செய்யவில்லை
சதிகாரர்களின் சூழ்ச்சி வலையின்
அதிகாரத்திற்கு அடி பணிவதில்லை
வாய்மைக்கு ஒருபோதும்
வாய்ப்பூட்டு போடுவதில்லை
நட்புக்கு ஒருபோதும்
ஆப்பு வைப்பதில்லை
சலனமற்ற கண்களும்
சபலமற்ற உள்ளமும் கொண்டிருக்கிறேன்
போர் என்று வந்தபின்
உறவு பார்ப்பதில்லை
இயலாமை காரணமாக விட்டுக்கொடுத்துவிட்டு
தியாகம் என்ற வார்த்தையில் ஒளிந்து
மனம் வெதும்பி நிற்பதில்லை
தனித்தவனாக இருப்பதும் பிறர்
என்னைத் தனித்துப் பார்ப்பதில்கூட
தாழ்வுணர்ச்சி அடைவதில்லை
நாடகம் முடியும் வரை
நானா எனக்குள் நானாய் இருக்கவே விரும்புகிறேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக