வல்லமை படப்போட்டி-91
”உலகமென்னும் நாடகமேடையில் நித்தம் ஒரு புத்தம்புது நாடகம்! அதிலொன்று அரசியல் பதவிகளுக்காக மனிதர்கள் தம் கண்ணியம் விற்று அதிகாரத்தில் உள்ள பெண்மணிகளிடம் ’பதவி’சாகத் தலைதாழ்ந்து நிற்பது!” என்று வருந்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆட மாட்டார் உலகினில்
ஆட்சிப் பீடத்தைப் பிடிக்க
அள்ளி அள்ளி கொடுத்து
ஆடவைக்கும் வஞ்சிப் பெண்ணின்வரம்பு மீறல்
ஆட்டுவிப்பிற்கு ஆடுகின்றார்
அமைச்சர் யாவரும் பதவிஆசையில்
தன் மானத்தை அடகு வைத்து
தல்யைட்டி பொம்மைகளாய் மாறுவது
தலைவிதியா ? இல்லை இறைவனின் சதியா ?
அக்கிரமங்களுக்கு தலையாட்டும்
பொம்மையாய் மானிடர் இருக்கும் வரை
தலை நிமிர்வு தமிழகத்திற்கும் அவர்தம்
எதிர்கால வாரிசுகளுக்கும் இல்லை ஒரு போதும்
வேதனையும் சோதனையும் தமிழக மக்களுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக