வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழமுது கவிச்சாரல்-3-12-16

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 3--12--16 நாளாம் போட்டி கவிதையின் தலைப்பு #உள்ளம்_எட்டிப்_பார்க்கிறது வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதி ராசேந்திரன்அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகி_கவிதாயினி_கவிஇமையம்_உஷாராணி நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உள்ளம் எட்டிப்பார்க்கிறது என் கள்ள ம னத்தை படிக்கின்றது
உ ன்னத செயல் நீ செய்தாயா
உள்ளம் வருந்தி கேட்கிறது
பிறந்தது முதல்
மறந்தும் உலகிற்கு
சிறந்தது ஏதும் செய்தாயா நல்லதையெல்லாம்
துறந்து விட்டாயா
பெற்ற தந்தையை
பிச்சை எடுக்க வைத்தாய்
கட்டிய தாரத்தை
பட்டினி போட்டாய்
தாயை தவிக்கவிட்டு
தாரத்தின் பிடியில் கிடந்தாய்
கூடப் பிறந்தவனையே
நீதிமன்றத்துக்கு இழுத்தாய்
நாட்டிற்காவது நல்லது செய்தாயா
மரங்களை வெட்டி கடத்தினாய்
உரமாய் இருந்து தீவிரவாதத்தை வளர்த்தாய்
வட்டிக்கு விட்டு ஏட்டிக்கு போட்டியாய்
பெட்டி பெட்டியாய் பணம் குவித்தாய் போதும்
உள்ளம் எட்டி பார்க்கிறது
உள்ளதை சொல் என்று கேட்கிறது
உறக்கம் கலைந்து இனியாவது நல்லது செய்
சரஸ்வதி ராசேந்திரன்

1 கருத்து: