திங்கள், 23 ஜூன், 2014

வி ஐ பி வியாதி ---கல்கி---23-8-2009


தெருவெங்கும் மந்திரியின் உருவத்தை தாங்கிய பிளக்ஸ் போர்டுகள் , பேனர்கள், கொடிகள்
மந்திரி அந்த தெருவில் நடக்கும் திருமணத்திற்கு தலைமை தாங்க வருகிறார் என்பதால்
தெருவே முதல் நாள் மாலையிலிருந்தே வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது
தெருவின் ஓரங்களில் இரண்டு பக்கமும் சீரான இடைவெளியில் வட்ட வட்டமாய்
பிளீச்சிங் பௌடரினால் கோலமிடப்பட்டிருந்தது, தெருவே கட்சி கறைகளாய் காட்சியளித்துகொண்டிருந்தது.
எல்.கே.ஜி படிக்கும் பேரனை பள்ளிவிட்டு அழைத்துவரும்போது தெருவின் கோலத்தை
பார்த்து நடந்து வந்தவன்.
" என் தாத்தா காரெல்லாம் நிறைய வருமா?"
" வெடியெல்லாம் போடுவாங்களா?"
நிச்சயமா போடுவாங்க, காது கிழிய
" இது என்ன தாத்தா வெள்ளை வெள்ளைய பவுடர்?
அது பிளீச்சிங் பவுடர்
" அதை எதுக்கு போட்டிருக்காங்க?
வியாதி பரவாமலிருக்க
"எத்தனையோ கல்யாணம் நடந்துதே, அப்பவெல்லாம் போடலிய ஏன்?
இது வி . ஐ. பி வரும்போதுதான் போடுவாங்க
" இப்ப புரியுது தாத்தா"
என்ன புரிந்தது? புரியாமல் கேட்டார் தாத்தா!
வி. ஐ. பி களாலதான் வியாதி பரவுது இல்லையா தாத்தா?
தாத்தாவுக்கு சரியான பதில் தெரியவில்லை!!!

கல்கி 23 /08 /2009 மன்னைசதிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக