வெந்தணல்
தினசரி இதழ்களில்
தினம் வரும் செய்தி
மனிதர்களின் காமம்
மரண குழிவெட்டும்
சோகம் தினமும்
மலராத மொட்டுகளையும்
மதி கெட்டு கசக்கும்
காமுகர் கூட்டம்
கொலை கொள்ளை
லஞ்சமயம் ஊழல்
வித விதமாய் சாதிசன சண்டைகள்
விலையுயர் ஏழ்மை வலிகள்
மத வெறியில் வன்முறைகள்
இத்தனையும் அரங்கேறுகின்றன
சுதந்திரமாய் சுலபமாய்
பொது வெளியில் படும்
அவஸ்தைகள் கண்டும்
அரசியல் வாதிகள் கூட
அரசியல் பண்ணுகிறார்கள்
மக்களிடமும் அவர் தம் மக்களிடமும்
பொறுக்க முடியாத
பூமித்தாய்க்கும் கூட,அடிக்கடி
பிரஷர் வருகிறது(காற்றழுத்தம் )
புயலாக ஆடுகிறாள்
நீராகவும் ஓடுகிறாள்
ஆனாலும் குளிரவில்லை
அக்கிரமங்களின் வெந்தணல்
அப்படியேதான் இருக்கிறது
சரஸ்வதி ராஜேந்திரன்
sathiramannai@gmail.com
தினசரி இதழ்களில்
தினம் வரும் செய்தி
மனிதர்களின் காமம்
மரண குழிவெட்டும்
சோகம் தினமும்
மலராத மொட்டுகளையும்
மதி கெட்டு கசக்கும்
காமுகர் கூட்டம்
கொலை கொள்ளை
லஞ்சமயம் ஊழல்
வித விதமாய் சாதிசன சண்டைகள்
விலையுயர் ஏழ்மை வலிகள்
மத வெறியில் வன்முறைகள்
இத்தனையும் அரங்கேறுகின்றன
சுதந்திரமாய் சுலபமாய்
பொது வெளியில் படும்
அவஸ்தைகள் கண்டும்
அரசியல் வாதிகள் கூட
அரசியல் பண்ணுகிறார்கள்
மக்களிடமும் அவர் தம் மக்களிடமும்
பொறுக்க முடியாத
பூமித்தாய்க்கும் கூட,அடிக்கடி
பிரஷர் வருகிறது(காற்றழுத்தம் )
புயலாக ஆடுகிறாள்
நீராகவும் ஓடுகிறாள்
ஆனாலும் குளிரவில்லை
அக்கிரமங்களின் வெந்தணல்
அப்படியேதான் இருக்கிறது
சரஸ்வதி ராஜேந்திரன்
sathiramannai@gmail.com
நல்லாயிருக்கு அம்மா...
பதிலளிநீக்குநன்றி குமார் அவ்ர்களே
பதிலளிநீக்கு