திங்கள், 23 ஜூன், 2014

நம்பிக்கை

ஊரே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது .காரணம் ஒரு இருபது வ ய து வாலிபன்
தற்கொலை க்கு முயற்சி பண்ண ஊர் கூடி அவனை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு கொண்டு
வந்து விட்டு தந்தை ராமசாமிக்கும் டோஸ் விட்டுவிட்டு போனார்கள்
ராமசாமிக்கோ அவன் மேல் உள்ள ஆத்திரம் போகவில்லை ,
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ,வேலைக்குப்போகாமல் குறுக்கு வழியில் சம்பாதிக்க
நினைத்து ஏமாந்து நின்றதால் அவர் திட்டியது தாங்காமல் அவன் தற்கொலைக்கு முயன்றான் .வீட்டிலுள்ளவர்கள் சமாதானம் செய்தனர் .ஈமு கோழி திட்டத்தில்போட்டு மொத்த பணத்தையும் ஏமாந்தால் ராமசாமிக்கு கோபம் வராதாஎன்ன ?
''ஏய் ,நீ திருந்தவே மாட்டியா? முன்னே போனவனை ஓர் கல் தடுக்கினா ,பின்னேப்போறவன் ஒதுங்கிடனுமிள்ளே ,இப்படியா போய் ஏமாறுவே?
எத்தனை பேப்பர் படிக்கிறே ?டிவியிலே பார்க்கிறே?அப்படி இருந்தும் மேலே மேலே போய் காசை பாழாக்குனா ,ஏமாந்தா ....உனக்கு புத்தியே கிடையாதா?'ஏண்டா ஏன் உயிரை வாங்குறே?''வருத்தப்பட்டார் ராமஸ்வாமி '
''எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ,எப்படியாவது சம்பாத்திடலாம்னு தான் ,நம்பிக்கைதானே
வாழ்க்கைன்னு சொல்றீங்களே ''
''ஆமாண்டா , தெண்டமா காசை கொட்டி ட்டு ..  ச்சே ,உனக்கு வெட்கமாயில்லே''
''ஆமா நீங்க மட்டும் என்னவாம் ,என்ன சொல்ல வந்துட்டீங்க? ''
''நான் என்னடா பண்ணுனேன் /"
''நீங்களும்தான் என்ன அவதி பட்டாலும் ,மறுபடி மறுபடி மாற்றி மாற்றி ஒட்டு போட்டு
பார்க்கிறீங்க ?நல்லது நடக்குதா ?அதுக்காக விடறீங்களா? ஒரு நம்பிக்கையிலேதானே
காலம் ஓட்டறீங்க , அதுபோலத்தான் நானும் ,உங்க ஜீன்ஸ் தானே எனக்கும் வரும் ''
ராமசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக