திங்கள், 23 ஜூன், 2014

எது முக்கியம் ?--தினமலர் -வாரமலர்-- 20---6--2008


ஹீரோ ஹோண்டாவில் போய்க்கொண்டிருக்கும்போது செல் சிணுங்கியது .வண்டியை ஓரம் கட்டி செல் போனை இயக்கினான் சரவணன் .
"ஹலோ "
"ஹலோ ,சரவணன் ,ஒரு குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது "ஒ"பாசிடிவ் ரத்தம் உடனடியா வேணும் ,ரத்தம்தரும் நண்பர்களையும் அழைத்து வரமுடியுமா ?"என்று ரத்ததான தொண்டு நிறுவனத்திலிருந்து ,அசோக் பேசினான்
"ஐ ந்து நிமிஷத்தில் வரேன் "என்று கூறிவிட்டு 'ஒ'பாசிடிவ் உள்ள தன்நண்பர்களிடம் செல்லில் விவரம் சொல்லி வரச்சொன்னான் .
மறுபடி செல் சிணுங்கியது
"சரவணன் ,உங்க சுகுணாவிற்கு பிரசவ வலி வந்துடுச்சு ,ஆஸ்பிடல் போகணும் ,சீக்கீரம் வாங்க "-மாமனார் பேசினார் பதட்டமாக
"சாரி மாமா ,நான் இப்ப அவசரமா ஒரு இடத்திற்கு போகிறேன் ,நீங்களும் அத்தையும் சுகுணாவை பத்திரமாக அழைச்சுகிட்டு போங்க ,நான் என் வேலையைமுடிச்சுட்டு நேரா ஆஸ்பிடல் வந்துடுறேன் "என்று கூறி செல்லை ஆப் செய்தான் சரவணன் .அவனும் அவன் நண்பர்களும் ரத்தம் கொடுக்க அந்த குழந்தை அபாயக்கட்டத்தை தாண்டியது குழந்தையின் பெற்றோர் காலில் விழாத குறையாக அவன் கைகளைப்பிடித்துக்கொண்டுஅவனையும் அவன் குடும்பத்தையும் வாழ்த்தினர் '.
விடை பெற்றுக்கொண்டு சுகுனாவைப்பார்க்க காற்றாய் பறந்தான்
குழந்தை குறுக்கே இருக்குன்னு டாக்டர் சொன்னதா மாமா சொன்னாரே ,என்ன ஆச்சோ ?என்ற பதை பதைப்புடன் வண்டியை ஓட்டினான்
"மாப்பிள்ளை ,எங்கே போயிட்டீங்க ?நல்ல வேலையா நார்மல் டெலிவரி ஆச்சு ,பேரன் பிறந்திருக்கான் ,இந்தாங்க சாக்லேட் "என்றார் மாமனார் சந்தோஷத்துடன் .அதற்குள் டாக்டர் வெளியில் வர
"சுகுணா எப்படி இருக்கா டாக்டர் ?''என்று வினவினான் சரவணன்
"நல்லைருக்காங்க பொய் பாருங்க "என்றால் டாக்டர் நளினா
குதூகலத்தோடு உள்ளே ஓடினான் .அவனைக்கண்டதும் சுகுணா முகத்தை திருப்பிக்கொண்டாள்
சாரிடா ,சுகுணா ,ஒரு அவசர வேலை "...
"ஓஹோ என்னை விட அவசரவேலையோ? உங்களுக்கு எது முக்கியம் ?மனைவியா ?வேலையா ?இதுவே சிசேரியனா இருந்தா , புருஷன் கையெழுத்து கேட்பாங்கலேன்னு உங்களுக்குத்தொனவே இல்லையா ?டாக்டரே உங்களிடம் வெளியூர் கிளியுறு போயிடாதிங்கன்னு சொல்லலே ,அப்படிஇருந்தும் நீங்க அலட்சியமா ,,,,,"பொரிந்து தள்ளினாள்
"'ஐயம் வெறி சாரி சுகுணா ,மனைவியை விட மனிதாபிமானம் எனக்கு அந்த நேரத்திலே பெரிதாகப்பட்டது ,ஆமாம் சுகுணா யார் பெற்ற குழந்தையோ உயிருக்குப்போராடிக்கொண்டிருன்தது ,தன்னார்வரத்ததான நிறுவனத்திலே நானும் நண்பர்களும் பதிவு பண்ணி வைச்சிருந்ததாலே போன்பண்ணி கூப்பிட்டாங்க
அதான் அங்கே போயிட்டேன் போகாம இருந்திருந்தா ........அந்த குழந்தை அநியாயமா செத்திருக்கும் .பிரசவம்னா யாராவதுதுனைக்கு வந்திடலாம் ஆனால் அங்கே ஒரு உயிர் போயிருக்குமே அந்த குழந்தையோட பெற்றவர்களின் வாழ்த்தும் ,ஆசியும்தான் உனக்கு சுகப்பிரசவத்தை தந்திருக்கு சுகுணா "
"என்னை மன்னிச்சுடுங்க நான் விஷயம் தெரியாமல் கோபப்பட்டேன் நீங்க செய்த நல்ல காரியம் தான் எனக்கு நல்லதை செஞ்சிருக்கு.
"உண்மையை உணர்ந்த சுகுணாவையும் குழந்தையையும்
ஆசையோடு அணைத்துக்கொண்டான் சரவணன் .
தினமலர் வாரமலர் 20-6-2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக