திங்கள், 23 ஜூன், 2014

அணுசரனை --தினமலர் -பெண்கள்மலர்--18---6--2012


நேர்மை ,துணிவு ,கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு கொண்ட ராகவன் ஆக்சிடெண்டில்
ஒரு காலை இழந்ததும் ,அப் செட் ஆகி படுக்கையில் முடங்கி கிடந்தார் ,பார்க்கவே பாவமாக இருந்தது
எத்தனை சுறு சுரப்பான மனிதர் ....இப்படி மூலையில் முடங்கி கிடைப்பதென்றால் .....பாவம் இப்படித்தான் வருகிறவர்கள் எல்லாம் இர க்கப்பட்டு பேசுவதால் அவர் இன்னும் மோசமான நிலையில் முடங்கினார் .மனைவியால் இதை ஜீரணிக்க முடியவில்லை .இப்படியே விட்டால் ...அவர் ஒரு நாளும் எழப்போவதில்லை
யோசித்தால் ,அடுத்தநாள் ..
''எழுந்து பல்லை வில க்குங்கள் ,,கால்தானே போச்சு கைக்கு என்ன ?எழுந்து ஷேவிங் பண்ணிக்கலாம் ,பேப்பர் படிக்கலாம் ,அதை விட்டுட்டு படுத்தே கிடந்தா பெட் ஷோர் வந்துடும் அப்புறம் ரொம்ப கஷ்டம் ‘’
இதை கேட்ட மகன்அருணுக்கு அம்மா மேல் கோபமாக வந்தது
''ஏம்மா ,அப்பா சம்பாதிச்சு கொண்டு வந்தப்ப ,,இப்படி பேசுவிங்களா பாவம் அப்பா முடியாம இருக்கப்ப ...அவருக்கு அனுசரணையா இல்லாம இப்படி பேசுறீங்களே நியாய மா ?'என்றான் கோபத்துடன்

''ஆமாண்டா ,நான் அனுசரணையா இல்லாமத்தான் அவருக்கு இத்தனை நாளா சேவை செஞ்சேனா? வேண்டாம் ,உங்கப்பாவை படுக்க வைச்சகிட்டு பக்கத்திலே இருந்து எல்லாவற்றையும்
செய்யேன் நானா வேண்டாங்கிரேன் ..முடியுமா உன்னால் ?பைத்தியக்காரன் மாதிரி பேசற ...என்னால அவருக்கு செய்யமுடியாம இல்லே.நாம ரொம்ப அணு சரனையா ,இரக்கமா இருக்கிறதாநினைச்சு அவரை முடக்கிப்போடப்படாது ,அவர் வேலையை அவரே கொஞ்சம் கொஞ்சமா செய்ய வைச்சாத்தான் அவருக்கும் தன்னம்பிக்கை வரும் இல்லே படுக்கையில் படுத்தபடியே இப்படி நமக்கு ஆயிடுச்சேன்னு புலம்பியே முடியாதவராயிடுவார் அதை புரிஞ்சுக்க முதலில் ....அதோடு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா ,உன் வேலையை விட்டுட்டு கூடவே இருந்து செய முடியுமா ?இதை எல்லாம் மனசிலே வைச்சுக்கிட்டுதான் அவரை அவர் வேலையைச் செய்ய தைரியம் கொடுக்கிறேன் ,,''
என்ற அம்மாவின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்தான் அருண்
பெண்கள் மலர்
18 --6—20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக