திங்கள், 23 ஜூன், 2014

சாமர்த்தியசாலி


வரதன் மிகவும் சாமர்த்தியசாலி க டையில் எந்த சாமான் எந்த கடையில் சீப்பாக இருக்கிறதோ அங்கேதான் வாங்குவான் அதிலும் எக்ச்பெயரி தேதி பார்த்துத்தான் வாங்குவான் ,அவன் அடிக்கடி
ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில்தான் காப்பி குடிபான் .அன்று என்னையும் தொந்திரவு பண்ணி அழைத்துப்போனான்
வேறுவழியின்றி நானும் இர்வருக்கும் காப்பி ஆர்டர் பண்ணினான் சர்வர் காப்பி கொண்டுவந்து
வைத்துவிட்டு போனான் பேசிக்கொண்டே காப்பியை பாதி குடித்திருப்பான் திடீரென சர்வரை '
கூப்பிட்டான்
' சர்வர் வந்தான் '' என்னப்பா டிகாஷன் அதிகமா இருக்கே ,கொஞ்சம் பால் கொண்டுவா ,நானே நண்பரை அழைத்து வந்திருக்கேன் இன்னைக்குப்பார்த்து இப்படி சொதப்பிட்டீங்கலெ போ பால் கொண்டு வா ''என்று சத்தமிட்டான்
சர்வரும் ஒரு வித எரிச்சலோடு கொண்டுவந்து கொடுத்தான் .உங்களுக்கு பால் தரட்டுமா என்று என்னை கேட்டார் .நான் சொன்னேன் ''ஏன் காப்பி கரெக்ட் டாககத்தான் இருக்கு ,உங்களுக்கு கசக்கிறதா? ''கேட்டேன்
''அட நீங்க ஓண்ணு பதினைந்து ரூபாய் சொல்றான் ஒரு காப்பி யை அளவு மட்டும் அதே அளவுதான் அதான் கொஞ்சம் பால் கேட்டு வாங்கினேன் ,ஒவ்வொரு நேரம் பால் சர்க்கரை ,டிகாஷன்
இப்படி மாறி மாறி கேட்டு காப்பி அளவை அதிகப்படுத்தி விடுவேன் எப்படி என் ஐடியா ?பெருமையாக கேட்டான் அவன் சாமர்த்தியத்தை மெச்சுவதா அல்பம் என்று திட்டுவதா?என்று புரியாமல் சிரித்து வைத்தேன் ,
பிறகு ஒருநாள் --
நான் வேண்டாமென்று சொன்னாலும் கேட்காமல் ஹோட்டல் அழைத்துப்போனான் ,எனக்கு அவன் உடன் போவதே சங்கடமாக இருந்தது ,ஏனெனில் இவன் சில்லித்தனமாக நடந்து ஹோட்டல் காரன் என்னையும் அல்பமாக நினைத்து விடப்போகிரானே என்று , வரதன் விடவில்லை
.ஹோட்டலில் அமர்ந்ததும் இங்கே வெங்காய ஊத்தப்பம் சூப்பரா இருக்கும் என்று சொல்லி ஆர்டர் கொடுத்தான் .ஊத்தப்பம் வந்தது .நான் பயந்தது மாதிரியே அவன் சர்வரை கூப்பிட்டான் ,அதே சர்வர் வந்தான் . ''இந்தபாரு ,ஊத்தப்பம் வேகவே இல்லை ,வேறு கொண்டு வா‘’ஆணையிட்டான்
சர்வர் என்னைப்பார்த்து ''ஏன் சார் ஊத்தப்பம் வேகலையா ?''கேட்டார் எனக்கு வைத்தது வெந்திருக் கே ''
''எனக்கு வைத்தது வேகவில்லையே ''என்றான் வரதன்
''அப்படியா ,சரி இதோ வரேன் சாரி ''என்ற சர்வர் வேறு கொண்டு வந்து வைத்தான் 'சாப்பிட்டுவிட்டு இரண்டு காப்பி ஆர்டர் செய்து குடித்துவிட்டு எழுந்தான் .பில் வந்தது .மூன்று ஊத்தப்பத்துக்கு பில் போடப்பட்டிருந்தது .வரதனுக்கு கோபம் வந்து சப்தமிட்டான் சர்வரிடம் .
சப்தம் கேட்ட முதலாளி விவரம் கேட்டார் வரதன் சொன்னான் ,அதை கேட்ட முதலாளி ''ஏம்பா தினம் வர கஷ்டமருகிட்ட இப்படியா நடந்துப்ப ''கேட்டார்
உடனே சர்வர் சொன்னான் ''சார் இவர் சாப்பிட்ட பிளேட்டை நானின்னும் கிளீன் பண்ணல அவர் வேகலைன்னு சொன்ன அந்த ஊத்தப்பம் எங்கேன்னு கேளுங்க சார் '' என்றான் சர்வர்
விழித்தான் வரதன் உடனே சர்வர் சொன்னான் ''இவர் எப்பவுமே இப்படித்தான் சார் காப்பி கொடுத்தா ஏதாவது காரணம் சொல்லி இரண்டு இரண்டா சாப்பிட்டுவிட்டு ஒன்றுக்கு மட்டும் காசு தருவார் அதான் இன்னக்கு பிளேட்டை அப்படியே வைத்திருந்தேன் சார் ''சர்வர் சொன்னதும் நான் குன்னிபோயிட்டேன்
நானே தவறு செய்தமாதிரி ச்சே இன்மேல் இவனுடன் போகக்கூடாது என் தீர்மானித்து விட்டேன்
ஹோட்டல் முதலாளி ''படிச்சவங்களே இப்படி நடந்துகிட்டா ,...நான் என்னத்தை சொல்றது ?இன்னைக்கு
பரவாயில்லை இனிமேல் இப்படி செய்யாதீர்க ள் ''என்றார்
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு புரிந்துகொண்டிருப்பான் வரதன்
தன்னை சாமர்த்தியசாலின்னு நினைச்ச வரதன் சர்வரின் சாமர்த்தியத்தை கண்டு மலைத்து விக்கித்து ,அவமானப்பட்டு தலை குனிந்தபடியே பில்லை கட்டிவிட்டு வெளியேறினான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக