திங்கள், 23 ஜூன், 2014

முடிவு ----தினமலர் --வாரமலர்-- 23---6--2013


'பங்கஜம் இப்படி பார்க்கிற பெண்ணை எல்லாம் உன் பிள்ளை நிராகரிச்சா ,உன் பிள்ளைக்கு
கல்யாணம் ஆகுறதே கஷ்டம் .உன் பிள்ளை யாரையாவது 'லவ் 'பண்ணுகிறானா?' தோழி
மரகதம் கேட்டாள்
''வாயை கழுவு ,அவன் எனக்கு அடங்கிய பிள்ளை .அவனுக்கு இதெல்லாம் தெரியாது .நீயா
,எதையாவது கிளப்பாதே ''-தோழியை பங்கஜம் அடக்கினாள் .
''நீ ஏதாவது கண்டிஷன் போட்டிருக்கியா ?''
''அதெல்லாம் ஒண்ணுமில்லே ,ரொம்ப படிச்ச பொண்ணாயிருந்தா ,வீட்டுக்கு அடங்கியிருக்க மாட்டா .சமையல் வேலை தெரிஞ்சுருக்கணு ம் .குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியனும் ,கணவனுக்கு அடங்கிய பெண்ணா இருக்கணும் ,இப்படி இருந்தாதானே
குடும்பத்துக்குஏத்த மாதிரி இருக்கும் நான் எதிர்பார்க்கிறது தப்பா?'' ''சொல்றேன்னு தப்பா நினைக்காதே ,இப்படியெல்லாம் பார்த்தா உன் பிள்ளை சந்நியாசியாகத்தான் இருக்கணும் ,இல்லே அவனா யாரையாவது காதலிச்சு வீட்டை விட்டு ஓடிப்போகும் நிலை வரும் ஜாக்கிரதை ,இது கலி காலம் ,நான் வரேன் ''விடை பெற்று சென்ற தோழியை யோசனையுடன் பார்த்தாள் பங்கஜம் .
இந்த காலத்தில் நம் கட்டு பாடுகள் எல்லாம் செல்லுமா?மரகதம் சொல்வதுபோல் விசாகன்
எந்த பெண்ணோட வலையி லாவது விழுந்து ,கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டை விட்டு
போனால் ,குடும்பத்தின் மானம் மரியாதை என்னாவது ?கூடாது ,நாமே ஒரளவு பார்த்து ஒரு பெண்ணை செட்டில் பண்ணவேண்டியதுதான் .நினைத்தபடி அவளே ஒரு பெண்ணைப் பார்த்து விசாகனிடம் கேட்காமலேயே ஒப்புதல் கொடுத்து விட்டாள்
செய்தி கேட்ட விசாகன் ,''அம்மா நீ பார்த்திருக்கும் பெண் நமக்கு சரிப்பட்டு வருமனு நினைக்கிறாயா ?''
''ஏன் அப்படி கேட்கிறே ?,படிச்சிருக்கா ,நல்லாவும் இருக்கா ,ஏன் உனக்கு பிடிக்கலையா ?''
''இல்லாம்மா,அவள் நிறைய படிச்சிருக்கா ,வேலைக்கு போவேன்னு அடம் பிடிச்சா ,என்ன பண்றது?''
''போகட்டும் ,அதனாலென்ன ?''
''வீட்டோட இரு ந்தா போதும்னு சொன்ன நீயா இப்படி பேசுறே?''
' ஆமாண்டா ,என் காலம்வேறு வீடே சொர்க்கம்னு இருந்துட்டேன் ,வரவளும் ம்இருக்கணும்னு எதிர்பார்க்கலாமா ?பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டாமா/''கூலாக சொல்லிவிட்டு போனாள் பங்கஜம்
விசாகன் குழம்பி அப்பாவைப்பார்க்க , அவர் தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினார் .
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக பேசினவள் இப்போது தலைகீழா பேசுகிறாளே பெண் வசதியான இடம் என்பதாலோ /இரவு படுக்கை அறையில் தன் சந்தேகத்தை கேட்டார் கனகசபை .
''இதோ பாருங்க ,எனக்குத் தெரிஞ்சது சமையல் ஒன்றுதான் .வருகிற பெண் சமையலில்
பெரிய ஆளாம் ,விருது எல்லாம் வாங்கியிருக்காளா ம் .அவள் சமைத்துப் போட்டால் நீங்க மட்டுமல்ல உங்க பையனும் என்னை ஓரம் கட்டிட்டா ?என்னால முடியாதுங்க ,அடுப்படிதான் என் ராஜ்ஜியம் .அதை நான் யாருக்காகவும் விட்டுத்தரமுடியாது அதனால்தான் ,வேலைக்குப்போகட்டும்னு சொல்றேன் ''
கனகசபை சிரித்தார்
''என்ன சிரிப்பு ? ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே ,நடுவில் வந்த நாற்காலியை விட
மாட்டேன்னு சொல்லும்போது ,நான் முப்பது வருஷமா ஆண்டுகொண்டிருக்கிற என்
ராஜ்ஜியத்தை எப்படி விட்டு கொடுக்கமுடியும் ? அவள் வேலைக்குப்போனா கொஞ்ச நேரம்தான் வீட்டில் இருப்பாள் சண்டை போடா நேரம் இருக்காது ,அதோட நான் சமைச்சுப் போடறதால மாமியாரிடம் மரியாதை இருக்கும் ,அதான் இப்படியொரு முடிவு எடுத்தேன்
.என்னால் முடியாத பட்சத்தில் என் ராஜ்ஜியத்தை அவள் ஆளட்டும் சரிதானே?
இந்த காலத்தில் எவள் சதா அடுப்படியில் வேலை செய்ய விரும்புகிறாள் என்னைப்போல "'
வினோதமான குணத்தையுடைய மனைவியைப்பார்த்து ,பெண்கள் புதிரானவர்கள்
என்பது சரிதான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார் கனகசபை
ஜூன் 23 ---6-- 2013 தினமலர் ---வாரமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக