திங்கள், 23 ஜூன், 2014

டெக்னிக்--தினமலர்-பெண்கள்மலர்---15-5-2010

ரமா கோபமாக இருந்தாள்.ஊரில் நடக்கும் பங்குனி திருவ்ழாவிற்க்காக ஓர்ப்படி லதாவையும் ,பிள்ளைகளையும் அழைத்திருந்தாள்.தன்வீட்டிற்கு .அவர்கள் வந்த சமயம் வேலைக்காரி வரவில்லை என்றால் கோபம் வராதா?'
'
அக்கா, இதெல்லாம் சகஜம்தானே ?ஆளுக்கு கொஞ்சமாய் வேலைகளை செஞ்சுட்டா போச்சு 'என்று சொல்லி அன்றைய
வேலைகளை பகிர்ந்து செய்தார்கள் கீதாவும் ,ரமாவும்.. அடுத்த நாள் வேலைக்காரி முனியம்மா தன் எட்டு வயது மகளை
அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் தாமதம் ரமா ,நேற்று வேலைக்கு வராத கோபத்தை வார்த்தைகளால்
கொட்டி தீர்த்தாள்.அத்தனை பேச்சுக்களையும் கேட்டு கொண்டே மகளுடன் உள்ளே சென்று வேலைகளை முடித்து விட்டு
வந்தாள்முனியம்மா .அவள் போனதும் கீதா கேட்டாள்.
"ஏங்க்கா,உங்க வேலைக்காரி பரவாயில்லையே நீங்க இத்தனை டோஸ்விட்டும் வாயே திறக்கம எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு போறாளே இந்த காலத்தில் இப்படி ஒருத்தியா ?"
' "நீ வேற ,கோவத்திலே கன்னாபின்னான்னு திட்டிட்டு உடனே பத்தோ இருபதோ கொடுத்திடுவேன் சமாதானத்திற்கு பேசாம போயிடுவா .இதெல்லாம் ஒரு டெக்னிக்தான் ஆனா நாம கோவத்தை காட்டலேன்னா அவள் நம்மை சாதாரணமா நினைச்சிடுவா அதுக்குத்தான் இந்த திட்டு "என்றாள்ரமா .
வீட்டிற்கு போகும்போது முனியம்மாவினுடைய மகள் " ஏனம்மா ,இப்படி வாயில வந்தபடி திட்டுறாங்க ...இதெல்லாம் கேட்டுட்டு அங்கே வேலை பார்க்கனுமா ?"என்று கோபமாக கேட்டாள்.
'"அடி போடி பைத்தியம் ,அந்தம்மா இன்னைக்கில்ல ,எப்பவும் கோவம் வந்தா இப்படித்தான் கத்தும் அதுக்காக ரோசம் பார்த்தா முடியுமா ?நாம வாயை திறக்காம இருந்தா கத்திட்டு உடனே பண்ம் கொடுக்கும் .சம்பளத்தை தவிர எக்ஸ்ட்ராவா பணம் கிடைக்குதில்லே இதெல்லாம் ஒரு டெக்னிக் "
முனியம்மாவை வியப்பாய் பார்த்தாள்அவள் மகள் .
தினமலர் -பெண்கள்மலர் 15 ---5---- 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக