திங்கள், 23 ஜூன், 2014

வாழத்தூண்டும் மரணம்


''ஏய் ,உனக்கு என்னாச்சு ?பைத்தியம் மாதிரி நடு ரோட்டிலே படுத்திருக்கே ?எழுந்துவா
டிராபிக் நிறைய வர இடத்திலே ஏன் இப்படி மறியல் பண்ற மாதிரி படுத்திருக்கே ,ப்ளீஸ்
எதா இருந்தாலும் பேசிக்கலாம் இப்போ எழுந்து வா அதோ பார்,பஸ் வேகமா வருது
வாயேன் ''என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே வேகமாக வந்த பஸ் ரோசிமேல்
ஏறி இறங்கியது .ரோஸி துடித்துகொண்டிருந்தது
சை சனியன் படுக்க இடம் பார்த்திருக்கு பார் ;என்று திட்டியபடியே யாரோ ஒருவன்
அதை இழுத்து ரோட்டோரத்தில் தள்ளினான் . தலையை தூக்க முடியாமல் கண்களை போட்டு உருட்டிக்கொண்டிருந்தது ரோஸி ,பக்கத்தில் போய் நின்று கண்ணீர் வடித்தபடியே ,''நான் எத்தனை கத்தினேன் நீகேட்டாயா?இப்பப்பார் ,உன் உயிர் போகப்போகிறது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தே?
பரிதாபப்பட்ட ஆடு கேட்டது .
''என் கதை ரொம்ப சோகமானது ,என்னத்தை சொல்றது ?ஆனால் என்னை பெற்றவர்களும் ,உடன் பிறப்புகளும் படாத கவலையை என்னை ஒரு முறையே பார்த்த
நீ என் மரணத்தை தடுக்க எத்தனையோ முயன்றாய் ,நான்தான் கேட்கவில்லை
உன்பாசத்தைப்பார்க்கும்போது என் மரணம் இப்போ என்னை வாழத்தூண்டுது ஆனால்
அது முடியாது ,என்னோட பிறந்தது மூன்று பேர் நான் கண்விழித்து இரண்டு மாதமே
ஆனது என் உடன் பிறந்தவர்களுடன் ஜாலியா விளையாடிக்கொண்டிருந்தேன்
அப்போ காரில் வந்த ஒரு கனவான் டிரைவரிடம் ;;அதோ பார் ,சுத்த கருப்பு கலரில்
கிடக்கிற அந்தநாயை தூக்கிட்டு வா ''என்று ஆணை பிறப்பிக்க என்னை கதறக் கதற தூக்கிட்டு போனான் .அவர் வீட்டுக்கு .
நான் தாயையும் ,உடன் பிறப்புகளையும் பிரிந்த சோகத்தில் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்தேன் அதைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை?ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடாமல் இருக்கமுடியும் வயிறு பசித்ததே ,போட்டதை சாப்பிட்டேன் கொஞ்சம் வளர்ந்ததும் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள் .
அவர்கள் புதிதாக வீடு கட்டும் இடத்தில் என்னை காவல் காக்க வைத்தார்கள் .வாட்ச்மேன் குடும்பமும் அங்கேயே இருந்தது ஒரு குடிசை போட்டு ..
அவர்கள் சாப்பிட்ட எச்சில் மீதியை போட்டது விதி அதையும் தின்று கொண்டிருந்தேன்
இரவு நேரத்தில் மட்டும் என்னை அங்கிருந்த ஆற்று மணலில் கட்டிப்போட்டுவிட்டு
வாட்ச்மேன் வீட்டுக்குள் படுத்து விடுவான் .நான் பயத்தில் கத்தினால் வெளியே வந்து
கம்பால் என்னை அடிப்பான் கடுப்பில் .அதற்கு கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் .
வீடு விறு விறுவென்று வேலை நடந்தது .வீட்டு வேலையை பார்க்கவரும் முதலாளி
கடையில் விற்கும் டைகர் பிஸ்கட்டை நாயான எனக்கு வாங்கி போடுவார் ,அவர்கள் எப்படி நடத்தினாலும் நான் நன்றி உணர்ச்சியுடன் அவர்களுக்கு பாது காப்பாக இருந்தேன்
வீடு வேலையாகி விட்டது .ஒரு வாரத்தில் கிரஹப் பிரவேசம் என்று எல்லோரும் பிசியாக இருந்தார்கள் .இப்போதெல்லாம் என்னை கட்டுவது இல்லை சுதந்திரமாக த்தான் விட்டார்கள்.ஆற்று மணலில் படுத்து இஷ்டப்படி புரண்டு விளையாடுவேன் குஷியாக
கிரஹப்பிரவேச முதல் நாள் வந்த முதலாளி வாட்ச்மேனை கூப்பிட்டு ''ஏம்பா நாளைக்கு கிரஹப்பிரவேசம் இது என்ன திருஷ்டி பரிகாரமா அடிச்சு விரட்டு ,அசிங்கமா வீட்டுமுன்னால ''என்று கூசாமல் சொல்ல அந்த வாட்ச்மேன் என்னை கம்பை எடுத்து விரட்டினான்
அன்னைக்குத்தான் மனுஷங்களை புரிஞ்சுகிட்டேன்
தெரு முனை வரை விரட்டி விரட்டி அடித்தான் ஓடினேன் ஓடினேன் கால் வந்த திக்கெல்லாம் போகும் இடமெல்லாம் எஎன் தாய் தென்படுகிறாளா எனபார்த்தேன் இல்லை கால்வலி மனவலி யோடு பஸ் ஸ்டாண்ட் வந்த நான்அங்கு ஒரு மூலையில்
ஆற்று மணல் கிடக்க அசதியான நான் அதில் படுத்து கண் அயர்ந்தேன் ,அப்போது ஒருவன் பக்கத்தி இருந்த ஒருவனிடம் ''அங்கே பாருடா காலை நீட்டிகிட்டு சுகமா தூங்கிறதை நாம வேலை கிடைக்காம நாய் பிழைப்பு பிழைக்கிறோம் ரொம்ப பொறாமையா இருக்குடா அந்த நாயைப்பார்த்து ,அதுக்கு இருக்கிற நிம்மதி கூட எனக்கில்லையே ''அவனேந்தநேரத்தில் கண் வைத்தானோ ,,திடீரென்று ஒரு பஸ் காரன்
என் அருகில் வந்து உரசுராப்பில சரக் பரக்குன்னு பிரேக் அடிக்க பதறிப்போய் பக்கத்தில் இருந்த டீ கடையில் ஒதுங்கினேன் அந்த டீ கடக்காரன் என்னவோ அவன் கடை புரோட்டாவை திங்க வரதா நினைச்சு ''சனியனே எங்க வரே ?''என்று திட்டி குபீருன்னு
கொதிக்கிற வென்னீரை என் மேல ஊற்ற துடித்துப்போய் அலறி ஓடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் மேல் விழ ,பயந்து போன அவன் கம்பை எடுத்து அவன் கடுப்பை காட்டி என்னை ஓட ஓட விரட்டினான் .நான் மீண்டும் ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ,மனம் விரக்தி அடைந்தது கடவுள் நமக்கு பேசும் திறனை கொடுத்திருந்தாலாவது இந்த நன்றி கெட்ட மனிதர்களை திட்டியாவது தீ ர்க்கலாம் அதுவும் இல்லை நொந்துபோய் நடந்தேன் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்த மாணவ குரங்குகள் என்னை கண்டதும் கல்லை விட்டெரிய மீண்டும் ஓடினேன் விடாது அவர்கள் துரத்த நான் இடரிப்போய் .முள் வேலியில் விழ என் வால் மாட்டிக்கொண்டது அபபொ
ழுதும் இரக்கமில்லாமல் கல்லால் அடிக்க நான் வலி பொறுக்கமுடியாமல் ஓட எத்தனிக்க என் வாழ் அறுபட்டு விழ நான் அதை பொருட்படுத்தாமல் ஓடினேன் உயிரை
காப்பாற்றிக்கொள்ள வால் போனதில் எனக்கு துளியும் வருத்தமில்லை .ஏனெனில் என் பழைய முதலா ளியையோ ,வாட்ச்மேனையோ பார்த்தால் என்னையறியாமல் நன்றி விசுவாசத்தால் வால் ஆடுமே அது கூடாது என்பதற்காகத்தான் நம்மிடம் நன்றி இல்லாதவர்களிடம் நமக்கு ஏன் நன்றி ?என்னைப்போல் வாயீல்லாத நீ என்மேல் காட்டும் பாசத்தைப்பார்த்து எனக்கு வாழணும்னு தோணுது ஆனால் ..இதோ என் உயிர் ...போகப்போகிறது ..காலன் என்னை நெருங்கி விட்டான் ஆடே நாய் பிழைப்பு
என்பது இதுதானோ?...நான் வரேன் 'வெட்டி வெட்டி இழுத்து உயிர் விட்டது ரோஸி
கண்ணீர் விட்டபடியே அதைக்கடந்தது ஆடு .என் நிலைமை என்ன ?கசாப்பு கடைதான்
தன் நிலைமையும் நினைவு வர அதற்கும் சேர்த்து கண்ணீர் விட்டபடியே சென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக