திங்கள், 23 ஜூன், 2014

விருது --தங்க மங்கைசெப்டம்பர் 2012


"கல்வி அதிகாரி ஐயா உங்களை கூப்பிடுகிறார் ஐயா "உதவியாளர் ரங்கசாமி சொன்னான்
எதற்காக கூப்பிடுகிறார் என்று யோசனையுடன் சென்றார் தலைமையாசிரியர் மணிவாசகம்
"வாய்யா,ஒண்ணுமில்லே நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராயிட்டு இருக்கு , உங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுங்கள் "
"இல்லே ஐயா ,எனக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம் ஐயா "
"என்னய்யா இப்படி சொல்றே ஊரிலும் .மாணவர்களிடமும் கெட்டபேர் வாங்குகிற ஆசிரியர்களெல்லாம் மந்திரி சிபாரிசிலே
போட்டி போட்டு விண்ணப்பம் கொடுக்கிறார்கள் ,உனக்கு எல்லாத்திறமையும்இருக்கு இயல்பா வரதைவேண்டாம்னு சொல்றியே ஏன் ?
"நீங்க சொல்றமாதிரி கெட்டபேர் வாங்கியவர்களோட பட்டியலில் என் பெயர் வந்தால் ......எப்படியய்யா ?வெளிலே இருக்கிறவங்களுக்கு தெரியாது ஆனால் ஊரிலுள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் உண்மையில் யார் நல்லாசிரியர்னு தெரியும் , நீங்க சொன்ன பட்டியலில் நான் இடம் பெற்றால் இவரும் அப்படித்தான்னு நினைச்சிடக்கூடாதில்லேஅதுக்குத்தான் ,அதோட என்கிட்டே படிக்கிற மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தோட ,நல்லாப்படிச்சு பெரிய வேலைகளை அமர்ந்து ,அந்த ஆசிரியர்கிட்டே தான் படிச்சு முன்னுக்கு வந்தேன்னு சொல்றாங்க பாருங்க அதுதான் எனக்கு பெரிய விருது , அந்த விருது எனக்கு போதும் ஐயா "வியப்பாய் பார்த்தார் கல்வியதிகாரி "மணிவாசகம் ஒரு வார்த்தை சொன்னாலும் அதுதான்யா திருவாசகம் "புகழ்ந்தார் கல்வியதிகாரி
தங்க மங்கை செப்டெம்பர் இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக