மூர்த்தி ,அரசாங்கத்துக்கு நாற்காலிகள் சப்ளை செய்திருந்தான் , சம்பத்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கான செக்கை வாங்க புறப்பட்டான் ,
''வாங்க சார் ,செக் வாங்கத்தானே வந்தீங்க ,பாங்கிலே பணம் இல்லியாம் ,இரண்டுநாள் ஆகும்னு
சொல்லிட்டாங்க ,இரண்டு நாள் கழித்து வாங்க ''என்றார் அதிகாரி
எரிச்சலுடன் மூர்த்தி புலம்பிக்கொண்டே போனான் ..
என்னய்யா இது அந்த மூர்த்தி விவரம் புரியாம இருக்கான் ,வெறும் கையை வீசிக்கிட்டு வந்தா
கொடுத்துருவோமா '' கிளார்க்கிடம் சொன்னார் அதிகாரி ..
கிளார்க் சிரித்துக்கொண்டார்
இரண்டு நாள் கழித்து ----
மூர்த்தி போனான் அதிகாரி யை பார்க்க -இன்றும் அவன் கையில் ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொண்டார் அதிகாரி
''வாங்க மூர்த்தி ,உட்காருங்க ,இதோ செக் போட்டு தரேன் ''சொல்லிவிட்டு செக்கில் எழுதி கொடுத்தார் ,.மூர்த்தி சந்தோஷமாக புறப்பட்டான்
பாங்கில் -- ''என்ன சார் ,டேட் போட மறந்துட்டாங்களே ,சாரி போட்டு வாங்கிட்டு வாங்க ''என்றார் மானேஜர்
அட ,கடவுளே என்ன மானேஜர் இவர் ,இப்படி கணிக்காம..ச்சே ஒரு செக்கிற்கு எத்தனை வாட்டி அலையுறது அலுத்துக்கொண்டே போனான்
''டேட் போடலையா சாரி இங்க கொண்டாங்க ''போட்டு கொடுத்தார் உள்ளுக்குள் சிரிப்புடன்
மறுபடி மானேஜர் சொன்னார் ;''என்னசார் இது ,இப்படி கொண்டு வந்தா நான் எப்படி பணம் கொடுக்கிறது ,என் வேளையிலே காலியாயிடும் ,அமௌண்ட் சரியா எழுதப்படலே ,வேற செக் வாங்கிட்டு வாங்க '' விரட்டினார்
ஆத்திரம் வந்தது மூர்த்திக்கு ,''இதப்பாருப்பா ,உன் பிடிவாதம் இதிலே செல்லாது ,நீ வேணா லஞ்சம் வாங்காம இரு ஆனால் இவனுவு வாங்காம விடமாட்டாங்க ,பேசாம ஒரு ஐநூறோ ,அறுனூரோ கொடுத்து வேலையை பார்ப்பியா ,அதை விட்டு நூறு தரம் அலையுவியா ''நண்பன் சொன்னான்
எரிச்சலுடன் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அதிகாரியிடம் போனான்
''சார், இந்தாங்க ,என்னால இனிமேல அலைய முடியாது , வீடு வேற தூரம் ,இப்பவாவது ஒழுங்கா
செக் போட்டு எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு கொடுங்க ''என்றான் மூர்த்தி
இப்பவாவது புரிந்ததே என்ற ஏளனப்பார்வையுடன் . மூர்த்தி கொடுத்த பணத்தை வாங்கி மேஜை மீது வைக்கவும் போலிஸ் வரவும் சரியாக இருந்தது
எனக்கா செக் வைக்கிறே நான் வைச்சேன் பாரு செக் எப்படி ?என்று இறுமாப்புடன் பார்த்தான் மூர்த்தி அதிகாரியை ,

எனக்கா செக் வைக்கிறே நான் வைச்சேன் பாரு செக் எப்படி ?என்று இறுமாப்புடன் பார்த்தான் மூர்த்தி அதிகாரியை. . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக