திங்கள், 23 ஜூன், 2014

செத்தவன்


'' சார் , பீச் ஓரமா ,ஒரு பிரேதம் கிடக்கு சார் ''ஒரு மீனவன் சொன்னான்
''தலைவலி ஆரம்பிச்சுட்டா ? யோவ் ,204 போய் பாருய்யா ,கழுத்தறுப்பு '' எஸ் ,ஐ விரட்டினார்
கான்ஸ் டபிள் போய் பார்த்தார் ,பின்பு போனில் பேசினார் ''சார் 60 வயதுக்கு மேல இருக்கும் போல இரவே செத்திருப்பார் போல இருக்கு ,பாடியை எடுத்துகிட்டு வந்துடவா ? நீங்க வரீங்களா ?
எஸ் .ஐ ஜீப்பில் புறப் பட்டார் .அங்கு நின்ற எல்லோரிடமும் கேள்வி கேட்டார் ,யாருக்கும் அவர் யாரென்றே தெரியவில்லை , வெளியுரா இருக்கும் என்று சொன்னார்கள் அங்கு நின்ற மக்கள் .எஸ் ,ஐ .ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணி பாடியை எடுத்துப்போனார்கள் .மார்ச்சுவரியில் போட்டு விட்டு வந்தார்கள் .
அப்பொழுது ஒருவன் வந்தான் ''சார் அந்த ஆள் செத்துக்கிடந்த கொஞ்ச தூரத்தில் இந்த போன் கிடந்தது ''என்றான்
எஸ் ஐ .அதை ஆராய்ச்சி செய்தபோது ,,.மூன்று பெண்கள் மாறி மாறி பேசி அழுதார்கள் ,அது தங்கள் கணவருடைய செல் என்று சொல்லி .உடனே புறப்பட்டு வர சொன்னார் எஸ் ஐ .
அவருடைய மூன்று மனைவி மார்களும் அலறி புடைத்து ஓடி வந்தனர் .ஸ்டேஷனனுக்கு ,
ராணுவ வீரரா உங்கள் கணவர் ''எஸ் ஐ கேட்டார் .இங்கு எங்கே வந்தார் ?''
''அவசரமா சென்னைக்கு போகணும் ,அங்கே ஒரு நண்பரை பார்க்கணும் என்று சொல்லி வந்தார் ''
'' ஊரிலிருந்து வந்து உங்ககிட்ட பேசினாரா ?''
மூன்று நாளைக்கு முன் பேசினார் ,நேற்று நாங்க போன் பண்ணினபோது சுவிச் ஆகியிருந்தது சார் ''
''204 இவங்களை அழைசுகிட்டு போய் காட்டு யா''ஆணையிட்டார் .
கான்ஸ்டபில் அழைத்துப்போனார் , சிதைந்து கிடந்த உருவத்தைப்பார்த்து மூன்று பேரும் ஒப்பாரி
வைத்தனர் .
'' இந்தாபாருங்க ,பிணத்தை எடுத்துகிட்டு போக ஏற்பாடு பண்ணுங்க ,அதை விட்டு இங்கேயே உட்கார்ந்து ஒப்பாரி வைச்சா என்ன அர்த்தம் ''கான்ஸ்டபில் கத்தினார் .
போன் மூலம் விவரம் தெரிந்து எஸ் ஐ. ''நல்ல வேளை போன் கிடைத்தது ,இல்லா விட்டால் பிணத்தை வைச்சுகிட்டு தீபாவளி சமயத்தில் யார் லோல் படறது ''நிம்மதியானார்
''சார் ,சார் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார் '' என்று ஒருவர் வந்தார்
''என்ன கம்ப்ளைன்ட் ? ''
''சார் என்னோட செல் போனை காணோம் சார் அது விஷயமா தான் சார் ''
கான்ஸ்டபில் விவரம் கேட்க ---ஆஹா இந்த ஆளைத்தான் செத்துப்போனதாக நினைத்தோமா ?
உடனடியாக ஆஸ்பிடலுக்கு போன் போட்டு விவரம் சொல்ல அந்தமூன்று பெண்களும் ஓடி வந்து
கணவனைப்பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க ----கான்ஸ்டபிளும் ,எஸ் ஐ யும் அந்தபினம்யாருடையது என்று கண்டு பிக்கவேண்டுமே என்று தலையில் கை வைத்து அமர்ந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக