திங்கள், 23 ஜூன், 2014

இலக்கணம்


குமுதினிக்கு தெரியும் சுனிதா சும்மா வரமாட்டள் னு ஏதோ ஒரு விஷமத்தனத்தோடுதான்
வந்திருக்கிறாள்னு .
''என்னடி ,விஷயம் ?''கேட்டாள் குமுதினி
''உன் கணவரை பற்றித்தான் ...''
''என் கணவருக்கு என்ன ?''பதறியவள் போல் கேட்டாள்
''உன் கணவரோடு ..காரில் ..ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன் .நீ எச்சரிக்கையா இரு ''
சுனிதாவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை .
''அடிப்பாவி ,உன் வாழ்க்கையையே குழப்பிக்கொண்டிருக்கும் ஒரு செய்தியை சொல்கிறேன் ,அதைப்பற்றி கவலைப்படாமல் சிரிக்கிறாயே ?''எரிச்சலானாள் l சுனிதா
''உன் கிணற்றுத்தவளை வேதாந்தத்தை கேட்டு சிரிக்காமல் வேறு என்னசெய்வது ? உன்புருஷன் உன் முந்தானையை பிடித்துக்கொண்டு அலைகிறார் என்பதற்காக மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் லட்சிய பு ருஷர்களாகி விடுவார்களா ?இல்லை காரில் இன்னொரு பெண்ணை ஏற்றிகிட்டு
போறதாலே என் கணவரை அயோக்கியர்னு நீ முடிவு செஞ்சுட்டா ..உலகத்திலே யோக்கியர்களே மிஞ்சமாட்டார்கள் .''
''அப்படின்னா ''நான் சொல்றதை நீ நம்பலை ''
'' காரில் போனது உண்மைதான் ,ஆனால் .நீ சொல்றது தான் தப்பு ..ஏன் நீயே அவசரத்துக்கு
ஒரு டாக்சியில் தனியா போறே ,அப்பா நீயும் ,டாக்சி டிரைவரும் தான் இருக்கீங்க உடனே நீ டிரைவருடன் தனியா போனதாலே உன்னை கெட்டவள்னு முடிவு செஞ்சுட முடியுமா/?
ஒரு காலத்திலே ஆண்களுடன் பெண்கள் பேசுவதே தப்புன்னு பேசப்பட்டது .இப்ப ஆணும் பெண்ணும் சேர்ந்து உட்கார்ந்து வேலை பார்க்கிற காலகட்டம் ...கணவர் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சுதந்திரம் கொடுத்து பிறர் சுதந்திரத்தை மதிச்சு வாழற உலகம் இது .ஒரு பெண்ணுக்கு உதவுறதை கூட உன்னால தப்பாதான் புரிஞ்சுக்கமுடியுமா
ஏண்டி நீ இப்படி இருக்கே ,உன்னால நல்லதையே நினைக்கமு டி யாதா ?போடி போ ய் வேறு வேலை இருந்தா பாரு ''
சுனிதா மூக்குடைபட்டு தான் வந்த காரியம் ஜெயிக்காத சோகத்தில் கழுத்தை தோளில்
இடித்து முகத்தை திருப்பிக்கொண்டு போனாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக