திங்கள், 23 ஜூன், 2014

இளிச்ச வாயன் --தினமலர்-வாரமலர்--12--8--2012


"என்ன பாண்டியா ?வேலையெல்லாம் முடிஞ்சு டுச்சா?வீட்டுக்கு கிளம்பிட்ட ...?"சகஊழியர் மோகன் கேட்டான்.
"அதில்லையப்பா ...என் மனைவி சினிமா பார்க்கணுமுன்னு சொன்னா .டிக்கெட்ரிசர்வ் பண்ணிருக்கேன் .இருக்கவே இருக்கான்,இளிச்சவாயன் வசந்த் ,அவன் கிட்ட கொடுத்தா ,என் வேலையையும் சேர்த்து செஞ்சு வைக்க போறான் "என்று கூறி சிரித்தான் பாண்டியன் .
"அதுவும் வாஸ்தவம்தான் .நம்ம ஆபீஸ்ல ரொம்ப பேர் அவன்கிட்ட வேலை வாங்குறாங்க .ஆனாலும் மனுஷன் முகம் சுளிக்கணுமே,நல்ல மனுஷ்ன்பா ..."என்றான்மோகன் . எல்லார் வேலையையும் இழுத்துப்போட்டு செய்வதால் வசந்துக்கு இளிச்சவாயன் பட்டம் கொடுத்தார்கள் ஊ ழியர்கள் .தினமும் லேட்டாக வீட்டுக்கு போவது வசந்த் மட்டும்தான் .இது அவன் மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது . வசந்த் வீட்டுக்குள் வந்ததும் ......
"ஏங்க ,வாசுகி புருஷன் உங்க கூடத்தான் வேலை பார்க்கிறாரு .அவரெல்லாம் டான்னு அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்துடுறார் .நீங்க மட்டும் லேட்டா வரிங்க ,கேட்டா வேலை இருந்துச்சுங்கரிங்க .."என்று எரிந்து விழுந்தாள்
"யாராவது ஒருத்தர் பொறுப்பா இருந்து பார்க்கணுமில்லே கீதா .."என்ற வசந்த் முகம் கழுவ சென்றான் .
"வேலை செய்கிரவன்கிட்ட வேலையை கொடு , தூங்கிறவன்கிட்ட சம்பளத்தை கொடுங்கிறபழமொழியை உங்களுக்காகத்தான் சொல்லிருக்காங்க போல ..நீங்க இப்படி இளிச்சவாயனா இருந்தா உங்களை எல்லாரும் ஏமாத்ததான்
செய்வாங்க .."என்று கீதா கூற ,சிரித்தபடியே நகர்ந்தான் வசந்த் . ஒரு மாதத்திற்கு பின் ........இனிப்பு பொட்டலத்தோடு வந்த
வசந்த் ,மனைவி கீதாவை அழைத்து இனிப்பை ஊட்டிவிட ..."என்ன விஷேசம் ?.எதுக்காக இனிப்பு?"என்றாள் கீதா
"எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு .."என்றான் வசந்த் .
"என்னங்க சொல்றிங்க ?உங்களுக்கு பிரமோஷனா?உங்களுக்கு மேல் சீனியர்கள் எல்லாம் இருக்காங்கன்னுசொல்வீங்க
..அப்படி இருக்கிறப்ப உங்களுக்கு எப்படி பிரமோஷன் கொடுத்தாங்க ?"ஆச்சரியமாக கேட்டாள்கீதா .
"உனக்கு மட்டுமில்லே ,எல்லாருக்குமே இந்த ஆச்சரியம்தான் .எல்லாரும் அவங்க வேலையை என்கிட்டே கொடுத்ததாலே என்னால எல்லோருடைய வேலையையும் கத்துக்க முடிஞ்சது ..என்திறமையையும் வேலையையும் பார்த்த ம எம் .டி , எனக்கு பிரமோஷன் கொடுத்துட்டார் .இனிமே நான் மேனேஜர் .இப்ப சொல்லு யார் இளிச்சவாயன் ?"என்று கேட்டதும் ,வியப்பால் விழி விரிய கணவனை பார்த்தாள். கீதா
தினமலர் -வாரமலர் ----ஆகஸ்ட் 12 ------2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக