திங்கள், 23 ஜூன், 2014

இரண்டாம் த(π)ரம் --தங்க மங்கை--- மே -2013


''இதோ பாருங்க ,நீங்க யாரை வேண்டுமானாலும் இரண்டாம் தாரமாக கட்டிக்குங்க நான்
வேண்டாங்கலை ,ஆனால் மணவிலக்கு மட்டும் கேட்காதீங்க ,இந்த வீட்டிலே நான் ஒரு
வேலைக்காரியாகவாவது இருந்துட்டுப்போறேன் ,ஏன்னா உங்களை எனக்கு பிடிச்சிருக்கு ''
கெஞ்சினாள் மஞ்சுளா .
''டேய் ,கதிர் கேட்டியாடா ?பாவம் மஞ்சுளா ,அவளுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா
மனசு வருது?இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இப்பப்போய் அவளை பிடிக்கலைன்னு சொல்றது நியாயமாடா?''திட்டினான் நண்பன் சுந்தர்
ஆனாலும் கதிரின் காதுகளில் ஏறவில்லை ,அவன் பிடிவாதமாக இருந்தான் ,''இந்த பட்டிக்காட்டை வைச்சுகிட்டு என்னடா செய்யறது ?நானும் எவ்வளவோ திருத்திப்பார்த்தேன் ஒரு அங்குலம் கூட ஒத்து வரலையே என்னசெய்யச் சொல்றே?அதான் இந்தபட்டிக்காட்டை வெட்டி விட்டுட்டு சிட்டியிலே பெண் பார்த்திருக்கேன் என் முடிவிலே எந்த மாற்றமும் இல்லே டா ''
''உன்னை திருத்தவே முடியாது .இந்த முடிவுக்காக என்றாவது ஒருநாள் வருத்தப்படுவே ''சொல்லிவிட்டு எரிச்சலோடு கிளம்பினான் சுந்தர்
வலுக்கட்டாயமாக மஞ்சுளாவை வெட்டி விட்டுட்டு ,தான் பார்த்து மயங்கிய பெண்ணை திருமணம் செய்து கொண்டான் கதிர் .ஒரு மாதம் சுமுகமாக ,மகிழ்ச்சியாக ஓடியது வாழ்க்கை
ஒருநாள் ......
அலுவலகம் முடிந்து வந்த கதிர் மனைவி நிகிலாவைத்தேடினான் வீட்டில் எங்கும் அவள் இல்லை .தொலை பேசியில் அழை த்தான் ,அலுவலகப்பணி யாளர் , மனோகரனுக்கு
பிறந்தநாள் என்றும் ,இரவு உணவு முடிந்துதான் வரமுடியும் என்றும் நிகிலா தீர்மானமாகச் சொல்லி விட்டாள் .இரவு கையேந்தி பவனில் உணவு சாப்பிட்டுவிட்டு விடிய விடிய விழித்திருந்தான் கதிர் , விடியற்காலையில் மனோகரனின் தோளில் சாய்ந்திருந்த நிகிலா தள்ளாடித்தள்ளாடி வாய் குழற பேசியபடியே வந்தாள் திடுக்கிட்டான் கதிர்
''இல்லே சார் கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டாங்க ,வேறொ ண்ணு மில்லே ,பத்திரமா உள்ளே அழைச்சுட்டுப்போங்க ,நான் வரேன் ''மனோகரன் கிளம்பி போய்விட்டான்
''நிகிலா நீ குடிப்பியா?இதை ஏன் என் கிட்டே சொல்லலே?''
''நீ கேட்டியா ?நான் சிகரெட்டும் பிடிப்பேன் இதெல்லாம் நகர வாழ்க்கையில் சகஜம் இதுக்கு ஏன் நீ அலறுரே/?உன் பட்டிக்காட்டு பெண்டாட்டி மாதிரி என்னை நினைச்சுட்டியா ?உயர் வர்க்கத்துப் பெண் நான் பாதிநாள் இப்படித்தான் வாழ்க்கை என்னை இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்கிற தையெல்லாம் நான் அனுமதிக்க முடியாது ..சரி என்னை படுக்கையிலே படுக்கவை''அதிகாரமாகச் சொன்னாள் நிகிலா .
என்னதான் அவமதித்தாலும் ,அதிர்ந்துபேசாத மஞ்சுளா மனதில் வந்து போனாள் .இவள்
இரண்டாம் தாரம் மட்டுமல்ல இரண்டாம் தரம் தான் என வேதனை பட்டான் கதிர் .
தங்க மங்கை ------மே 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக