திங்கள், 23 ஜூன், 2014

மாப்பிள்ளை மனசு --தினமலர்--பெண்கள்மலர்--9--3--2013


''நல்லவன் ,நல்ல குடும்பம்னு நம்பித்தானே பெண்ணைக்கொடுத்தோம் ,ஆனால் அவன் நம்ம பெண்ணை நல்லா வைச்சுக்கலையே ,கொடுமை படுத்தறானே பாவம் ,காலையில் எழுந்தால் வீட்டு வேலை செய்யறதே கஷ்டம் இதுல அங்கபோ ,இங்கபோன்னு விரட்டல் வேறயா?ச்சே ,மனசு துடிக்குது . போய் கேட்டுட வேண்டியதுதான் ''
முருகேசன் புறப்பட்டார் .
என்ன மாப்பிள்ளை நீங்க ,அவளை இந்த பாடு படுத்தறீங்க ,செல்லமா வளர்ந்தவ ,அறியாப் பொண்ணு ,படிக்க வெச்செங்கி றத தவிர அவளை வெளியில எல்லாம் அனுப்பினதே இல்லை ,நீங்க என்னடான்னா அங்கபோ இங்கபோன்னு விரட்டரீங்க ,ஏன் நீங்க ஆபீஸ் போறப்ப இந்த வேலையெல்லாம் செஞ்சுட்டுப்போகலாமே
அதை விட்டுட்டு என் பெண்ணை ........''முருகேசன் பேசிக்கொண்டேபோக மாப்பிள்ளை
இடைமறித்தான் .
''மாமா ,உங்க பொண்ணு உங்களுக்கு எவ்வளவு வயசானாலும் குழந்தைதான் ..அதுக்காக
அவளை ஒண்ணுமே தெரியாம வளர்க்கிறதா?மாமா ,நான் தினமும் இருபது கிலோ
மீட்டர் தூரம் வண்டியிலே ஆபீஸ் போறேன் .வழியிலே எனக்கு ஏதாவது நடந்துடுச்சுன்னா .....உங்க பொண்ணு அறியாதவளாகவே இருந்தான்னாஅவள் எதிர்காலம்
என்ன ஆகும் /சொந்தங்களும் ,பந்தங்களும் எத்தனை நாளைக்கு அவ கூட இருப்பாங்க ?அதனால்தான் அவ எல்லாத்தையும் கத்துக்கணும்னு வெளியிலே அனுப்பறேன் ..இப்ப வேணும்னா கஷ்டமா இருக்கும் ..ஒரு கஷ்டம்னு வரும்போது சமாளிக்க இந்த அனுபவங்கள் உதவும் ''என்ற மருமகனின் பேச்சில் இருந்த உண்மை புரிபட வாயடைத்துப்போனார் முருகேசன் .
தன கணவரை புரிந்து கொள்ளாமல் அவர் தன்னை பாடாய் படுத்துவதாக தந்தையிடம்
புகார் சொன்னதற்காக வெட்கி தலை குனிந்தாள் லதா .
மகளிர் தின சிறுகதை ---தினமலர் ---பெண்கள்மலர் 9-3-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக