உழவர் சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு த் திரும்புகையில் தான் அந்த பழக்கப்பட்ட குரல் கேட்டது .
‘’ராமசாமி கொஞ்சம் நில்லு ,ஒரு அவசர விஷயம் ‘’’....கூறிக்கொண்டேவந்தார் ரெங்கபாஷ்யம் .
‘’என்னப்பா அப்படி தலைபோற அவசரம் ?’’
‘’’ராமசாமி , நீ வடக்கு வீதியில் விலைக்கு வீடு வேண்டும் என்று சொன்னாயே ,இப்ப கைகூடி வந்திருக்குடா ‘’’
‘’என்ன ரங்கா சொல்றே?’’
‘’ஆமாண்டா உன் வீட்டுக்கு பக்கத்து வீடு விலைக்கு வருகிறது ,வீட்டு ஓனர்
சிதம்பரத்தில் இருக்கிறார் ,அவர் தன் வீட்டை விற்கப்போகிறாராம் ,அதான்
உன்கிட்டே சொல்லலாம் என்று ஓடி வந்தேன் ‘’.
‘’அதுசரி ரங்கா ,அவர் என்ன விலை எதிர்பார்ப்பாரோ ,என் கையில் அவ்வளவு பணம் இருக்குமான்னு தெரியலையே’’
‘’ஊருல சதுர அடி என்ன விலையோ ,அதுதான் கேட்பாங்க, நீ இங் கேயே
உட்கார்ந்து யோசனை பண்ணுனேன்னா சரியா வராது ,வீடு கை நழுவிடும் ,ஏன்னா அவர்
உங்க இனம்தான் போய் பேசிப்பாரு ,பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்துக்கலாம்
,கைமாத்தா
உன் மைத்துனர் கொடுக்கமாட்டாரா? பாங் கில் இருக்கிறார்
,குறைந்த வாடைகைக்கு உன்னை இப்ப குடி வெச்சிருக்கிறாரே ஹெல்ப் பண்ணமாட்டாரா
என்ன?’’.
‘’ நீ சொல்றது வாஸ்தவம்தான் ,பார்ப்போம் ‘’ விடை பெற்றுக்கொண்டார்
வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சாவித்திரி யிடம் சொன்னார் .’
‘’என்னங்க ,எப்ப்டியாவது அந்த வீட்டை வாங்கிடனும்ங்க ,,சாமி சன்னதி தெருவா
இருக்கு , நாளைக்கு அண்ணன் ரிடையர் ஆகி இங்க வந்துடுவார் ,கடைசி காலத்தில்
ஒருத்தருக்கொருத்தர் துணையாகவும் ஆகிடும்ல ‘’’’
‘’எல்லாம் சரி சாவித்திரி ,பணம் வேண்டாமா ?’’
‘’ நகை நட்டை வெச்சாவது வாங் கிட வேண்டியதுதான் ,பத்தாட்டி அண்ணன் பாங்கில
லோன் போட்டுக்குவோம் , நீங்கயோசனை பண்ணாதீஙக’, புறப்படுங்க’’
சாவித்திரி சொல்லுவதும் சரிதான் ,அவளே நகைகளை வைக்க ஒப்புதல் கொடுத்து விட்டாள் ,மீதியை எப்படியாவது சமாளித்து விடலாம் .
ஐயாயிரம் ரூபாயை அட்வான்ஸ் பணமாக கொடுக்கு எண்ணி எடுத்துக்கொண்டு
சிதம்பரம் கிளம்பினார் ராமசாமி .மிகவும் கஷ்டப்பட்டு விலாசம் தேடி கண்டு
பிடித்து வீட்டை அடைந்தார்
காலிங் பெல்லை அழுத்தினார்
ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து கதவை திறந்தார்
‘’யார் நீங்க? என்ன வேணும் ?’’
‘’ நான் மன்னையிலிருந்து வருகிறேன்,வடக்கு வீதியிலுள்ளவீட்டை விற்கப் போறதா ரங்கபாஷ்யம் சொன்னார் ,அதான் ..’’
‘’அப்படியா உள்ளே வாங்க’’என்றார்
ராமசாமி உள்ளே போய் அம்ர்ந்தார்
‘’என்ன சாப்பிடுறீங்க? ஒய்ஃப் வெளியில போயிருக்கிறாள்’’
ஒண்ணும் வேண்டாம் சார் ,இப்பதான் காப்பி சாப்பிட்டுட்டு வந்தேன் ‘
‘’உங்க சொந்த ஊர் மன்னார் குடியா?’’வீட்டு ஓனர் கேட்டார்
‘’இல்லை சார் சுற்றுவட்டார பள்ளிகளில் வேலை பார்க்கிறேன் ,ஆனால் இப்போது
குடியிருப்பது என் மைத்துனர் வீட்டில் தான் . நீங்கள் விற்கப்போகும்
வீட்டிற்கு பக்கத்தில்தான் இருக்கிறது ,’’
‘’ஓ,அப்படியா? என் பிரதர் கூட மன்னார்குடியில்தான் ஷாப் வைத்திருந்தார் ,பெரிய கடைத்தெருவில் ‘’
‘’பெயர் ‘’
‘’ஆராவமுதன் ‘’
‘’சார் அவரை எனக்கு நன்றாகத்தெரியும் ,அப்ப நாம ஒரே இனம்தான் ,ரொம்ப நல்லதா போச்சு ‘’ராமசாமி குதூகலமானார் .
‘’எனக்கும் ஒரு திருப்தி , நம்மளாவாக்கே கொடுப்பதில் ‘’
‘’என்ன விலை எதிர்பார்க்கிறீஙக?’’
‘’ஊர் விலை உங்களுக்குத்தெரியாதாஎன்னா ? ஐயாயிரம் சதுர அடி ,விலையை கணக்கு போட்டுப்பார்த்துக்குங்க ‘’என்றார் நாராயணன் .
‘’சார் நீங்கசொல்றதும் நியாயம் தான் ,ஆனால் ,உடனடியாக என்னால் அவ்வளவு
தொகை புரட்டமுடியாது ,கொஞ்சம் டயம் கொடுத்தீஙகன்னா ,செட்டில் பண்ணிடுவேன்
‘’ என்றார் ராமசாமி வினயமாக ,
அப்பொழுது வெளியிலிருந்து வந்த
பெண்ணைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்போனார் ராமசாமி அந்த பெண்ணும் தடுமாறி
திகைத்துப்போனாலும் ,முதலில் சுய உண்ர்வு பெற்றவள் அவள்தான்
அவள் கல்யாணி .....
‘’சார் எப்படி இருக்கீங்க ? அந்த பள்ளியில்தான் இருக்கீங்களா/?’’என்று
மல்லிகை பூக்கள்மலர்வதுபோல் சிரித்துக்கொண்டே கேட்டாள் கல்யாணி
‘’இல்லம்மா ,அதற்கப்புறம் நிறைய ஊர் போய் இப்போ வடபாதி மங்கலத்தில் இருக்கிறேன் ,...இவர்.....’’
‘’என் கணவர்தான் , நீங்க பேசிகிட்டு இருங்க காபி கொண்டு வருகிறேன் ‘’என்று உள்ளேபோனாள்.
இப்படியொரு சந்திப்பு நிகழும் என்று ராமசாமி எதிர்பார்க்கவில்லை ,பாவம்
கல்யாணி எவ்வளவு தூரம் கெஞ் சினாள் ஊரில் பெரிய வி ஐ ,பிக்கள் கூட
அவளுக்காக சிபாரிசுக்கு வந்தார்கள் கேட்டாரா ராமசாமி ? அவர் மனதும் அன்றைய
நிகழ்ச்சிகளை தொகுத்துப் பார்த்தது ......
கல்யாணி கணக்கில் வீக்
ஒன்பதாம் வகுப்பில் அவள் முப்பது மார்க் எடுத்து பெயிலானாள், வகுப்பு
ஆசிரியரான ராமசாமி நினைத்தால் ஒரு ஐந்து மார்க்போட்டு அவளை பாஸ்
போட்டிருக்கலாம் ,ஆனால் போடவில்லை . நிறைய பேர் சிபாரிசு செய்தார்கள் ஏன்
டி இ.ஒ கூட சிபாரிசு செய்தார் , நேர்மையான ராமசாமி யிடம் எதுவும்
பலிக்கவில்லை .வயது கோளாறினால் ,கல்யாணி பல திரைப்படங்கள்பார்த்து
இருந்ததினால் ,பின் விளைவுகள் பற்றி தெரியாததினாலும் ,தனியாக
அம்ர்ந்திருந்த ராமசாமியிடம் போய் பல்லை இளித்துக்கொண்டும்,ஈஷிக்கொண்டும்
நின்று தன்னை பாஸ் போடச்சொல்லிக் கேட்டாள் .
விசுவாமித்திரர்ரான
ராமசாமி ,அந்த மேனகையின் செயலை வெறுத்து ,டோஸ் விட்டு வெளியேறினார் ,அவர்
எதற்கும் சலனப்படவில்லை ,பலர் பணத்தை காட்டினார்கள் ,கல்யாணி
பல்லைக்காட்டினாள் ,எதுவும் அவ்ர் நேர்மையை அசைக்கவில்லை .அடுத்து ,கல்யாணி
அந்த ஊரை விட்டே போய் விட்டாள் ,அவமானம் தாங்காமல் .அதற்கப்புறம்
,இப்பொழுதுதான் பார்க்கிறார் கல்யாணியை ,மேற்கொண்டு படிக்க வைக்காமல்
இரண்டு வருட்த்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாராம் அவள்தந்தை ..,
அன்று அவளை அவமானப்படுத்திவிட்டவருக்கு எப்படி வீட்டை கொடுப்பாள் ?ஒரு
பெண் உள்ளத்தின் கொதிப்பு எப்படி இருக்கும் என்பது அவருக்கு புரியாதாஎன்ன
?அவர் இப்பொழுது நிச்சயித்து விட்டார் ,வீடு அவருக்கில்லை என்று ,பெண்கள்
பாம்பு மாதிரி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள் . நேரம் பார்த்து
பழி தீர்த்துக் கொள்வார்கள் ,கல்யாணி மட்டும் விதி விலக்கா என்ன?’’
இனி
இங்கிருப்பது வேஸ்ட் அதுதான் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளே
அதற்கு பிறகுமா ,தனக்கு வீட்டை கொடுப்பார்கள்?முள்மேல்
அமர்ந்திருப்பதைப்போல் தவித்தார் ராமசாமி
காபி யை கொண்டுவந்து வைத்தாள் கல்யாயாணி ,ராமசாமிக்கு மன சாட்சி உறுத்தியது ,இருக்கையிலேயே நெளிந்தார்
‘’சார் ,உங்க நேர்மையையும் ,கண்டிப்பையும் பற்றி கல்யாணி
சொல்லியிருக்கிறாள் ,அப்படித்தான் இருக்க வேண்டும் ,எனக்கு உங்க கேரெக்டர்
ரொம்ப பிடிச்சிருக்கு ,கல்யாணி என்ன சொன்னாள் தெரியுமா .சாருக்கே வீட்டை
கொடுத்திடுங்கன்னு சொல்லிவிட்டாள் ’’ நாராயணன்
சொன்னார் .
ராமசாமிக்கு காபி உள்ளே இறங்க மறுத்தது.இவர் என்ன கிண்டல் செய்கிறாரா இல்லை
உண்மையில் சொல்கிறாரா?ஆடு திருடின கள்ளன் மாதிரி விழித்தார் அசடு
வழிந்தார் .
கல்யாணி சிரித்தபடியே சொன்னாள்
;’’சார் நான் பாஸ் பண்ணியிருந்தால் என் லைஃபே மாறியிருக்கும் இவரை நான் பண்ணியிருக்கமாட்டேன் ,ஒரு நல்லவரை இழந்திருப்பேன் , நீங்க
பெயில் போட்டாலும் நான் வாழ்க்கையில் வெற்றியை அடைஞ்சிட்டேன் ,என் கணவர்
என்னை படிக்க வெச்சு பட்டதாரியாக்கிவிட்டார் ,என்பிள்ளைகள் பெண் என்று
நான் நல்ல வாழ்க்கை வாழ்கிறேன் உங்கபுண்ணியத்தில் . நீங்க இப்ப அட்வான்சா
ஏதாவது கொடுங்க ,என் கணவர் சொன்ன தொகையை குறைச்சிருக்கேன் ,அதை உங்களால்
எப்போ கொடுக்க முடியுமோ அப்பொ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கலாம் என்ன
சொல்றீங்க ?’’கல்யாணி கேட்டாள் .
நா தழுதழுக்க ,’’ரொம்ப நன்றிம்மா ,உனக்குபெரிய மனசு , நீ நல்லாயிருக்கணும் .எனக்காக அமவுண்ட்டை குறைக்க வேண்டாம் ‘
‘’அப்போ உங்களுக்கு வீடு வேண்டாமா?’’
‘’என்னம்மா சொல்றே’?’’ பதறிப்போய் கேட்டார்
‘’அந்த வீட்டை உங்களைப்போன்ற நல்லவர்களுக்குத்தான் கொடுக்கணும்னு
தீர்மானிச்சுட்டேன் ,அதான் சொல்றேன் , நீங் க நான் சொன்ன தொகையை கொடுங்க
போதும் சார் ‘’
காலில் விழாத குறையாக,ரொம்ப நன்றிம்மா நன்றிசார் ‘’கண்களில் நீர்த்துளிர்க்க கூறிவிட்டு வெளி நடந்தார் .
நம் நேர்மைக்கு கிடைத்த பரிசுதான் இந்த வீடு என்று நினைக்கையில்
பெருமையாக இருந்த்து ராமசாமிக்கு ,மகிழ்ச்சியோடு ஊர் புறப்பட்டார்
,மனைவியிடம் வீடு கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள !!!!!