வியாழன், 20 ஜூலை, 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--9-1-17-இரட்டை நாக்கு

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 09/01/2017நடந்து முடிந்த பாரதிதாசன் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
தலைப்பு:- #இரட்டை நாக்கு
நடுவர் :- குழும நடுவர் குழு
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
இரட்டை நாக்கு
நரம்பில்லாத நாக்கு அது
நாலாபுறமும் சுழன்றாடும்
நாக்கால்பல நன்மைகள் இருந்தாலும்
போக்கால் சில சமயம் பிழை வருவதுண்டு
நல்லவை அல்லாதது
பேசினால் வரும் தீங்கு
அவதூறு பேசினால் வம்பு
குணத்தை கெடுக்கும் வீம்பு
குடும்பத்தை பிரிக்கும் கூர் அம்பு
பாம்புக்கும்பல்லிக்கும் தான் இரட்டை நாக்கு
பாழும் உலகத்திற்கும்இரட்டை நாக்குதான்
பணத்திற்காக பதவிக்காக
குணம் மாறி அவதூறு பேசும்
அரணுக்குள் இருந்தாலும்
அன்பின்றி ஆணவமாய் பேசும்
இன்று நல்லது என்று சொல்லும்
நாளை அதுவே பொல்லாததுஎன்று மாறும்
நாவே நீஒன்றாகவே இருந்தால்
நாடு வீடும் நலம்பெறும்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக