வளைந்தாலும் வலுவாகும் நாணல்கள்
ஆற்றின் கரைகளில்
அடர்ந்து கிடக்கும் நாணல்கள்
காற்றடித்தால் சாய்வதுண்டு
மழையினில் குனிவதுண்டு
வளைந்தாலும் வலுவாகும் நாணல்கள்
வாழ்க்கைப் பாடமாகும் நமக்கு
அந்தரத்தில் தொங்கும் வெளவால் போல்
சொந்த பலம் ஒன்றே துணையாக கொள்
நாணலைப்போல் வளைந்தும் குனிந்தும்
புரிந்து சகித்து பொருந்தியே வாழ்தல்
பழச்சுவைப் போன்ற பழக்கமே வெற்றி
வாழ்க்கை வளைவெல்லாம்
வீழ்வதாக அர்த்தமல்ல
வலுவிழந்து போவதுமல்ல
வாழப் பல வழிகண்டு
நாணலைப்போல் வலுவிழக்காமல்
வெற்றி கண்டு நிமிர்ந்து நிற்போம்
நாணம் வேண்டாம் வளையவோ குனியவோ குணம்
கோணல் இன்றி வலுவாய் நின்று
பதத்துடன் வாழ்ந்தால் பரபரப்பு இல்லை
நிதம் சுகம் நித்தம் உண்டு
குணம் மனம் கூட்டுகின்ற நாணல் வழி நிற்போம்
தினமுழைத்து வாழ்வோம் தெளிந்து
சரஸ்வதிராசேந்திரன்
ஆற்றின் கரைகளில்
அடர்ந்து கிடக்கும் நாணல்கள்
காற்றடித்தால் சாய்வதுண்டு
மழையினில் குனிவதுண்டு
வளைந்தாலும் வலுவாகும் நாணல்கள்
வாழ்க்கைப் பாடமாகும் நமக்கு
அந்தரத்தில் தொங்கும் வெளவால் போல்
சொந்த பலம் ஒன்றே துணையாக கொள்
நாணலைப்போல் வளைந்தும் குனிந்தும்
புரிந்து சகித்து பொருந்தியே வாழ்தல்
பழச்சுவைப் போன்ற பழக்கமே வெற்றி
வாழ்க்கை வளைவெல்லாம்
வீழ்வதாக அர்த்தமல்ல
வலுவிழந்து போவதுமல்ல
வாழப் பல வழிகண்டு
நாணலைப்போல் வலுவிழக்காமல்
வெற்றி கண்டு நிமிர்ந்து நிற்போம்
நாணம் வேண்டாம் வளையவோ குனியவோ குணம்
கோணல் இன்றி வலுவாய் நின்று
பதத்துடன் வாழ்ந்தால் பரபரப்பு இல்லை
நிதம் சுகம் நித்தம் உண்டு
குணம் மனம் கூட்டுகின்ற நாணல் வழி நிற்போம்
தினமுழைத்து வாழ்வோம் தெளிந்து
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக