வியாழன், 20 ஜூலை, 2017

26-6-2017---கவியுலகப் பூஞ்சோலை-ஏக்கமதை கைவிட மீளுமோஒர்ர் வாய்ப்பு

வணக்கம்!!!
கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....
29.06.2017 நாளன்று நடந்த
#ஏக்கமதைக்_கைவிட_மீளுமோ_ஓர்_வாய்ப்பு..
தலைப்பு போட்டிக் கவிதையில், சிறப்பான கவிப்படைத்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிதாயினி #சரஸ்வதி_இராசேந்திரன்...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#கண்ணதாசன்_சான்றிதழ்....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வழங்கப்படுகிறது.
அவருக்கு எமது குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
தலைமை நிர்வாகி மற்றும் குழுமம்...
கண்ணதாசன் சான்றிதழ்
ஏக்கத்தைக் கைவிட மீளுமோ ஒர் வாய்ப்பு
ஏக்கத்தையும் தூக்கத்தையும்
எடுத்தெறிந்து விட்டு எழுந்து
ஊக்கத்தோடும் முனைப்போடும்
ஆக்கத்தோடு செயல்பட்டால்
ஏக்கத்திற்கு வழியேது ?
பாடுபடாத வாழ்க்கை
பயன்படாது போகும்
முடியா வேலையும் முடியும்
விடாமுயற்சி செய்வதால்
விடுபடும் ஏக்கம்
நம்பிக்கையற்று நாம்
நாள்தோறும் வாழ்ந்தாலே
தும்பிக்கை இல்லா யானைபோல்
துயருற்று ஏங்கத்தான் வேண்டும்
வாய்க்கின்ற காலத்தை
துய்த்து வாழாவிட்டால்
வாய்ப்புகள் கைதவறிப்போகும்
ஏங்கியும் தேங்கியும் கிடந்து
எதிர்காலத்தை தொலைக்காதே
ஏக்கத்தை கைவிடு
ஊக்கத்தோடு செயல்படுஅதுவே
ஏக்கமதை கைவிட மீளும் ஒரு வாய்ப்பு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக