வியாழன், 20 ஜூலை, 2017

சங்க்த்தமிழ்கவிதைப்பூங்கா==6-7-17-படப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 06/07/2017நடந்து முடிந்த படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் சதா முருகன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
படப்போட்டி சான்றிதழ்
விடியலில் புறப்பட்டு
விரைவாக மீன் பிடிக்க
விரைகிறான் மீனவன்
கரைதனில் கடை விரிக்க
கட்டியவள் கரைதனில்
கனவோடு நிற்க
கடலுக்குள் அவனோ
காத்துகிடக்கிறான் மீனுக்காக
காற்றும் பலமாக வீசுது
நேற்றும் மீன் கிடைக்கவில்லை
வெற்றியோ ஒதுங்கி நிற்குது
சுற்றிலும் எதுவும் தென்படவில்லை
மீனே நீயும் நானும் ஒண்ணு
ஞானம் பிறந்தது இன்று நீ
தண்ணியிலே வாழுறே நான்
கண்ணீரிலேமிதக்குறேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக