கிராமியக்கவிதை சான்றிதழ்
கம்மாகரையில் சுத்தி வந்த மச்சானே
கம்மாகரையில் சுத்தி வந்த மச்சானே
கம்மாகரையில் என்னை
சுத்தி வந்த மச்சானே
சும்மாகிடந்த மனசை நீயும்
சுத்த வச்சு பாக்குறியே
சுத்தி வந்த மச்சானே
சும்மாகிடந்த மனசை நீயும்
சுத்த வச்சு பாக்குறியே
மேக்காத்து வீசையிலும்
வேர்த்துக் கொட்டுதடா
வேலி போட்ட தோட்டத்திலே
வெள்ளாடு புகுந்ததடா
வேர்த்துக் கொட்டுதடா
வேலி போட்ட தோட்டத்திலே
வெள்ளாடு புகுந்ததடா
மனச்செல்லாம் வேகுது
மல்லிகைப்பூ வாடுது
மங்கை என்னை நீயும்
இங்க வந்து பொண்ணு கேளு
மல்லிகைப்பூ வாடுது
மங்கை என்னை நீயும்
இங்க வந்து பொண்ணு கேளு
வண்ண வண்ண செம்பருத்தி
எண்ணம் போல கிடைச்சிருச்சு
கொஞ்ச நாளு பொறுத்துக்கோ
காதில் விழும் கெட்டி மேளம்
எண்ணம் போல கிடைச்சிருச்சு
கொஞ்ச நாளு பொறுத்துக்கோ
காதில் விழும் கெட்டி மேளம்
மாமன் அத்தைகிட்ட வந்து
சம்மதத்தை பெற்றிடுவேன்
மங்கள நாணோடு வந்து
மணம் புரிவேன் உன்னையே
சம்மதத்தை பெற்றிடுவேன்
மங்கள நாணோடு வந்து
மணம் புரிவேன் உன்னையே
பூப்போல மனசுக்குள்ள
புயலாக வந்த மச்சான்
புண்ணியமா போகும்
பண்ணாதே தாமதம் சீக்கிரமா வந்துடு
புயலாக வந்த மச்சான்
புண்ணியமா போகும்
பண்ணாதே தாமதம் சீக்கிரமா வந்துடு
சரஸ்வதிராசேந்திர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக