வியாழன், 20 ஜூலை, 2017

சங்கத்தமிழ் --5-7-17--- நெஞ்சத்தில் மலர்ந்து நினைவுகளைப்பறிக்கிறாய்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 05/07/2017நடந்து முடிந்த காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் இதயம் விஜய்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
நெஞ்சத்தில் மலர்ந்து நினைவுகள் பறிக்கிறாய்
விழிகள் செய்த மாயத்தால் எனக்குள்
சுழற்சியை உண்டாக்கி விட்டாய்
சுழலும் பந்து மேலும் கீழுமாய்
அலைக்கழிக்கிறது அடங்காமல்
சப்தமின்றி மனதுக்குள் நீ நிரந்தரமாய்
சப்பணம் போட்டு அமர்ந்து விட்டாய்
உன்னை நிராகரிக்க முடியாமல்உன் நினைவுகளை
மனம் வெளியே தள்ள முடியாமல்
அதிர்ந்து பிரமை பிடித்தவனாய் என் மனது
அசைவற்று நின்று விட்டதுஉன் அழகில்
நெஞ்சத்தில் மலர்ந்து நினைவுகளைப் பறித்துவிட்டு
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கடக்கிறாய்
உன்னையே கதி என்று இருந்ததினால்
உறவுகளை யெல்லாம் இழந்து நிற்கிறேன் நீயும்
துறந்து விட்டால் நான் துறவறம்தான் ஏற்கணும்
துன்புறுத்தும் மனதின் துயர் துடைக்க வந்துவிடு
படையே வந்து என்னை எதிர்த்தாலும்
பகைகள் திரண்டு வந்து துன்புறுத்தினாலும்
தடைகள் வந்தாலும் தளர மாட்டேன் உன்
தலைமேல் சத்தியம் கிளியே நல்ல வார்த்தை கூறு
பாரா முகம் போதும் பைங்கிளியே
பாவை உன் பதிலுக்காக காத்துக் கிடக்கிறேன்
துய்த்த துன்பங்கள் கண்டு மனம் கசிந்து
உய்விக்க வருவாயா உதைத்துவெளியில் விரட்டுவாயா?
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக