மேலை நாடும் ஏழைப்பாடும்
இந்திய நாட்டில் இல்லாத வேலையா ?
சொந்த நாட்டை விட்டு மேலை நாடுபோனால்
சொத்து சேர்க்க கனவு கண்டு
சுற்றம் விட்டு பெற்றவரை விட்டு
கடனை வாங்கி கனவுகளுடன் பயணம் போனால்
சுமைகளை சுமக்கிறார் சுமைதாங்கியாய்
செய்யும் வேலையில் தவறிழைத்தால்
செருப்படி போன்ற பேச்சுக்களையும் தண்டனையும்
செம்மையாய் கேட்கத்தோன்றும் கொடுமை
வெயிலில் கால்கள் வெந்துதான் போகும் இரவானால்
வெறுமைத் தீயை அழிக்க முடியாமல்
ஓய்ந்துதான் போகும் மனது தினமும்
ஒட்டகப்பால்குடித்து ஒவ்வாமையே வரும்
கால் வயிறு கஞ்சி குடித்தாலும் தாய் நாட்டிற்கீடாகுமா ?
எல்லோரும் மேலை நாடு போனபின்புதான் உணருகிறார்
ஏக்கத்தால் தூக்கம் இழக்கிறார் போக்கத்த ஏழை மக்கள்
ஏழைகள் படும் பாட்டால் கொழிக்கிறது மேலை நாடு
அடிமையாய் நினைத்து ஏழைகளை ஆளுகிறது மேலை நாடு
போதுமென்ற மனம் இருந்தால் பாரத தேசமே புண்னிய தேசமாகும்

சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக