புதன், 1 ஏப்ரல், 2015

குமுதம் ==வனஜா கிரிஜா=7=8-1997




வனஜா கிரிஜா
தூரத்திலேயே கிரிஜா வருவதை பார்த்து விட்ட வனஜா நின்றாள் . ஆனால் கிரிஜா வனஜாவை பார்த்ததும் விடு விடுவென கண்டு கொள்ளாமலேயே வந்த வழியே திரும்பிவிட்டாள் . வனஜாவுக்கு
இது அதிர்ச்சியாக இருந்தது .ஏனிப்படி ?நன்றி கேட்ட ஜென்மம் விடக்கூடாது .அவள் வீட்டிற்கே போய்ப்பார்க்கவேண்டும் ,கேட்க வேண்டும் புறப்பட்டாள் .
சப்தமின்றி மாருதி காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய முற்படுகையில் பேச்சுக்குரல் கேட்டு நின்றாள் . "அடிப்பாவி ,கடைக்குப்போன நீ வனஜாவை பார்த்துட்டு ....நின்று ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டியா ?சுத்த நன்றி கெட்டஜென்மம்டி நீ "
"அம்மா ,நீ நினைக்கிற மாதிரி நான் நன்றி கெட்ட ஜென்மமல்ல .கஷ்டகாலத்தில் அவள் செய்த உதவியை நான் மறக்கலை . . ஆனால் என் கணவரின் அடாவடித்தனத்தாலே நான் மறுபடி ஏழ்மை
நிலை அடைந்து விட்டதை கேள்விபட்டா வனஜா துடிச்சு போய்விடுவாள் .மறுபடி பண உதவி செய்ய முன் வருவாள் .என்னாலே அவள் குடும்பத்தில் குழப்பம் வரக்கூடாதுன்னுதான் ,அவளை
அவளை அலட்சியம் செய்தது மாதிரி நடித்தேன் .இதற்காக என் மனதை எவ்வளவு தூரம் திடப்படுத்திக்கொள்ள எத்தனை கஷ்டப்பட்டேன் என்பது உனக்கு புரியாது ''
இதை கேட்ட வனஜா தன் அவசர புத்திக்காக வெட்கப்பட்டாள் .
குமுதம் 7-8 -1997

4 கருத்துகள்: