ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மங்கை -----------மார்ச் 1985

                                                 கடத்தல் காரர்கள்
கன்னிப்பெண்ணே
கவனம் தேவை
இது கவிஞர்கள்
உலவும் நாடு !
உன்னைப்பூ வென்று
சாதித்தாலும்
பொன் கேட்க த்
தயங்க மாட்டார்கள் !
கட்டிக் கரும்பு கனி என்றாலும்
கார்கேட்க மறப்பதில்லை !
உன் விழியை
மீனாக்குவார்
இதழை தேனாக்குவார் ....
இப்படி இவர்கள்
உவமை கூறியே
உயர்ந்து விட்டார்கள் !
மயக்குமொழிகளால்
மனதை கெடுக்கும்
மாயக்காரர்கள் ...
கவிதை கூறியே
காதலிக்கும் கடத்தல்காரர்கள் !
இவர்கள் வலையில்
வீழாதே!
உன் காதை செவிடாக்கி
உன் கண்களைகாவலாக்கி
இதயத்திற்குத் தாள் போடு
உள்ளத்தில் ரோஜாவானாலும்
வெளியில் முள்ளாகவே இரு
அப்பொழுதுதான் உன்
பெண்மை காக்கப்படும் !
இந்த என் கவிதை மார்ச் 85 மங்கை இதழில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக