ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பத்திரிக்கைகளில் வந்த என் கவிதைகள்ஞாபகம் வருதேஞாபகம் வருதே 
சீரியல் பார்த்து
சீரியஸாய்
விமர்சனம் கிறுக்கி
வார்த்தைகளை
கோர்த்து
வடிவமைத்து ,
பத்திரிக்கைக்கு
புதுக்கவிதை எழுதி
டிவியில் வரும்
குறுக்கும் நெடுக்கும்
கட்டத்திற்கான
விடையை
பழையப்
பத்திரிக்கையை
புரட்டிப்பார்த்து
தபால்பெட்டியில்
போடும்போதெல்லாம்
மறக்காமல்
ஞாபகம் வருகிறது
நலம் கேட்டு வீட்டிற்கு
நாலுவரி
நாளைக்காவது ஒரு
கார்டு எழத
வேண்டுமென்று
தினமலர் -பெண்கள்மலர் 2007
---------------------------------------------


தெரிந்தது
யூரின் டெஸ்ட்
பிளட் டெஸ்ட்
ஈ .சி .ஜி
எக்ஸ்ரே
ஸ்கேன்
ஆயிரக்கணக்கில்
செலவழித்தபிறகுதான்
கண்டு பிடித்தார்
மருத்துவர்
என் உடம்பில்
ஒன்றுமில்லை என்று
அவருக்குத்தெரியாது
உண்மையில்
என்கையிலும்
பணமில்லை இனி என்று
அமுதசுரபி ----பிப்ரவரி --2004


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக