ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிறுவர்பாடல் 2-

உழைப்பே என்றும் உயர்வு 
உழைப்பே என்றும் உயர்வு ------தினம் 
உழைக்காதவன் வாழ்க்கை தளர்வு 
தேய்வதும் வளர்வதும் நிலவுக்கழகு -----வாழ்க்கையில் 
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு 
களைப்பும் சோம்பலும் நெருங்காமல் ------தினம்
கடமை ஆற்றினால் உயர்வுண்டு
ஓங்கி அடித்தால் மலையும் உடையும் -----அந்த
உறுதி கொண்டால் தடையும் விலகும்
அனைத்திலும் வரும்தான் தோல்வி ----தொடர்ந்தால்
அத்தனையையும் வெல்லும் முயற்சியின் வலிமை
தளர்ச்சி போக்கி முயற்சி செய்தால் -----பெரும்
வளர்ச்சி உன்னைத் தேடிவருமே
தொடர்க வெல்க புகழ் பெறவே


------------------------------------------------------------------
  சொல்லி மாயுமோ ?
நிலவு வருது நிலவு வருது 
நீல வானில் மிதந்து வருது 
உலவும் அதன் முகத்திலே 
கலையாய் இருக்கு ஒரு மச்சம் 
பார்ப்போர் கண்கள் பரவசத்தில்
பரவும் சோதி முகத்தினிலே
தன்னிகரில்லா தண்ணிலவு
தன்னலம் இல்லா தகையழகு
ஊருக்கெல்லாம்ஒளி கொடுக்கும்
உயர்ந்த திருவுளம் கொண்டதது
அம்புலி நீயோ இருக்குமிடம்
அறியோம் எங்கும் சுற்றிடுவாய்
குடிசைக்கிடையே பாய்ந்தொளியை
கூட்டி ஏழையை மகிழ்த்திடுவாய்
அம்மா நாடுவாள் உன் தயவை
அழும் குழந்தைக்கு சோறுட்ட
கவிஞர்ரசிப்பார் உன்னழகை
கருத்துடன் கவிதை தேரோட்ட
அல்லியும் மலர்ந்திடும் உனைக்கண்டு
சொல்லிமாயுமோ உன் பெருமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக