வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழமுது கவிச்சாரல்

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் ஓரழகை
காவியமும் கண்டதில்லை கன்னியுன் பேரழகை
வான்நிலவும் கொண்டதில்லை உன் வடிவழகை
மீனினத்தை விஞ்சிடுதே உன் விழியழகு
மானினமும் கொண்டதில்லை உன் மருள் விழியை
தேன்கூட இனிப்பில்லை தேவதையுன் சிரிப்பில்
செந்தாமரை இதழாக சிவந்திருக்கும் செவ்விதழ்கள்
செந்தமிழாய் ஒலித்திருக்கும் உன் சொற்கள்..
கோடியில் ஒருத்தி கோலமயில் ராணி
தேடினாலும் கிடைக்காது தெய்வமகள் பேரழகு
அங்கமெலாம் பரவசமாய் அழகாகி சிறந்ததுவே
தங்கம் போல் மேனி தகதகக்க நின்றவளே
பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தவளே!
நேரிழையே நெஞ்சில் தென்றலென குளிர்ந்தவளே.
மேவிடும் பேரழகுப் பெட்டகமாய் ஒளிர்பவளே
ஓவியனும் வரைந்தில்லையே உன்னைப் போல் ஓரழகை
காவியமாய்ப் பாடிடுவேன் கவினுற உன்னெழிலதனை..
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக