வெள்ளி, 26 அக்டோபர், 2018

தமிழ்சேவை--- 6 10-2018

மலர்களே மலருங்கள்
காந்தாள் விரலழகு கண்கள் நீலோற்பவம்
கண்ணிப்பூ கரந்தை கருவிளை நிறம்
இலவம் மனசு ஈங்கையின் குளிர்ச்சி
இனிமை தரும் பேச்சு நீயே என் மூச்சு
குறிஞ்சி வெட்சி செங்கோடுவேரி
தேமாம்மலா்களாய் மலா்ந்து மணம்
பரப்பும் மல்லிகை மங்கையே
ஆம்பலாய் விரிந்து நிமிா்ந்து நின்று
சுள்ளிமலராய் கள்ளி என்மனதைப் பறித்தவளே
அடும்பு அதிரல் அவரை ஆத்தியாய்
அரசன் என் தோளில் நீ ஆட. வருவாய்
தும்பையாய் துழாயாய் தோன்றியாய்
துளிர்த்து துளிர்த்து ஆசையை ஊட்டுகிறாய்
புன்னை புனாகம் பித்திகம் பகான்றம் சூடி
என்னை மயக்கும் வள்ளி வாழைப்பூ நீ
பாலையாய் முல்லையாய் விரியுமுன்புன்னகை
பாவலன் ஆக்கியது என்னை நெய்தலாய்
செம்மல் சேடல் தாழையின் மணம்
சேர்ந்து என் சிந்தையை மயக்குகிறதே
பூவரசம் பூத்தாச்சு பீர்கம் காச்சாச்சு
பெண்ணே ஏன் தாமதம் ஆரம் சூட
சாமந்தியே சண்பகமலரே செம்பருத்தியே
சடுதியில் வா பன்னீர்ப்பூவே பாதிரியே
வேங்கையாய் நந்தியாய் நாகப்பூவாய்
வஞ்சி உனைத்தேடி வருகிறேன் மாம்பூவே
வாகைபூப் போல வசீகரம் வாய்ந்தவளே
வகுளம் பூ வடவனமாய் மனம்போல்சேர்ந்து
வாடாமல்லி போல வளமாய் வாழ்வோம்
வாச மலர்களே வாருங்கள் எங்களை வாழ்த்த
சரஸ்வதிராசேந்திரன். 48மலா்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக