வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை 11-10=18

சிவப்பாகும் பூமி

சிவப்பாகும் பூமி
உவப்பான உண்மை இது
பணச்செறுக்கு ஏறி
குணம் சறுக்கித் தாழ்ந்து
தினம் சுட்டு வீழ்த்துகிறார்
அடுத்தவர் வாழ பொறுக்காமல்

கள்ளப் புருஷனுடன் சேர்ந்து
கணவனையே கொல்லும் காட்சிகள்
சுற்றித்திரியும் வெறி நாய்போல்
கற்பிழந்த கூட்டத்தால் கொலைகள்
அத்து மீறிய சொத்து ஆசையால்
அடிதடி கொலைகள் ஆயிரம்

தூண்டி விடும் சாதி வெறியர்கள்
வேண்டாதவரை வம்புக்கிழுத்து
மிருகவெறிகொண்டுத் தாக்கி
உருத்தெறியாமல் செய்கிறார்
முற்போக்கு வாதிகளின்
பிற்போக்கு செய்கைகளால் மனிதர்கள்
அற்பமாகி அருவாளை சுழற்றுகிறார்

நெஞ்சு கொதிக்கிறது இன்று
நெறிமுறைகளை மீறிய
நஞ்சு சமூகத்தால் நாளும்
புனித மனம் கொண்டு வாழ்ந்த
மனிதாபிமான முன்னோர்கள் வழி
மறந்த மடையர்களால் சிவப்பாறு ஓடுகிறது

விதியை மறுக்கும் பகுத்தறிவாதியை
சதமென நம்பி மூடர்கள் சிலர்
பாவபுண்ணியம் பாராமல்
மதியை அடகு வைத்து
கொலைகள் செய்வதையே
குடும்பத்தொழிலாக கொள்கிறார்

படரும் கொடி போன்று
தொடர்ந்து ஓடும் செந்நீரால்
பூமியே சிவப்பாகிப்போன அவலம்

சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக