வெள்ளி, 26 அக்டோபர், 2018

தமிழ்சேவை 17-12018

மண்ணுரிமைக் காப்போம்
வந்தாரை யெல்லாம் வாழவைத்த இந்த பூமியை
சொந்தம் கொண்டாடி அபகரிக்க நினைப்பதென்ன நீதியோ நீ
ஏவிடும் ஏவலாளா என் தேசம் கைகட்டி வாய் பொத்தி
ஏமாந்து போய் கப்பம் கட்டி உன்னிடம் அடிமையாக
வீரப் பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்
வெள்ளையனை விரட்டிய வீரத்தமி்ழன் வாழ்ந்த பூமியடா இது
வேற்றுமையில் ஒற்றுமை கண்டாலும் எம் குலம்
மாற்றானிடம் மண்டியிடும் வழக்கமில்லை
கெஞ்சிக்கேட்டிருந்தால் கொடையாக கொடுத்திருப்பேன்
கப்பம் என்று கேட்டதுதான் என்னுள் கோபத்தைத் தருகிறது
மண்ணுக்காக மரணத்தைத் தழுவும் மறவர் வழி வந்தவர்கள் எம்
கண்ணாய்க் காத்த மண்ணுக்கு கப்பம் கட்டாமல் காப்போம்
பொறுமையோடு சொல்கிறேன் பெருமையோடு போய்விடு
சிறுமை பட்டு சீர் கெட்டுப் போகாதே பிழைத்துப்போ
பேராசை வேண்டாம் இனியென போய்ச்சொல் உன் மன்னனிடம்
தோராய வாழ்வுக்கே நெருக்கடி வந்து விடும் என சொல்
மண்ணுயிர் காப்போம் தன்னுயிர் தந்தாலாவது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக