வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை==19=9=2018


பரிகாரி வல்லவன் தேசிங்கு ராசா

சொரூப்சிங் ரமாபாயின் தவப் புதல்வன்
செஞ்சிக்குப் புகழ் சேர்த்த வீரன் தேசிங்கு
பலமான பாரசாரி குதிரை அடக்கிய
பாலன் தேசிங்கின் வீரக்கதையைக் கேளீர் 

ஆர்க்காடு நவாபின் ஆணை கேட்டு
ஆக்ரோஷம் கொண்டு வீரவசனம் பேசினான்
ஆண்பிள்ளையாய் இருந்தால் வரச்சொல்
பெண்ணாக இருந்தால் அங்கேயே இருக்கச்சொல்லென்று

அரங்கனே அவனின் குலதெய்வம் அவன் 
அனுமதி தராதபோதும் புரவி ஏறிப்புறப்பட்டான்
முன் வைத்தக் காலை என்றுமே
பின் வைக்காத தேசிங்கு ராசன்

நண்பனின் சாவு நெஞ்சைத் தாக்க
முன் பகையும் சேர்ந்து கொள்ள
கர கரவென்றெ வாளைச் சுழற்றி எதிரியின்
சிரங்களைக் கொத்துக் கொத்தாய் எய்தான்

எதிரிகள் எல்லாம் ஓடி ஒளிய
எதிர்த்துப் போரிட எவரும் இல்லா நிலையில்
தனியாய் நாடு திரும்ப விரும்பாத
நனி சிறந்த வீரன் தேசிங்கு

கத்தியை மேலெறிந்து அதைத்தன் மார்பில்
தாங்கி வீர மரணம் அடைந்தான்
பத்து மாதங்களே ஆட்சி செய்தாலும்
பேரும் புகழும் வாய்க்கப்பெற்றவன் தேசிங்கு ராசா

சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக