விடை
நாணத்தால் சிவந்த கண்கள்
நகைதவழ்ந்து மின்னும் இதழ்கள்
மான்கொடுத்த மருட் பார்வையளே
மனமிலையோ வாய் மலர்த்த
தங்கத்தில் வைரம் பதித்ததுபோல்
அங் கமெலாம் அழகு மிளிர்ந்திட
சிந்தையினிக்கும் செந்தமிழ் சிலையே
வந்து தானாக மலர் வாய் திறவாயோ
நாளுக்கு நாளுன்னை நினைந்திரங்கி
நான் மெலிந்து போனேன் வாடும் என்
தோளுக்கு தோள்கொடுக்க மனமிரங்கு
வாள் தோற்கும் விழியழகு செல்வியே
வாய் மலர என்னதடை ? ஏது தடை ?
உன்னை சிலையென வணித்ததாலா
நான் விடுத்த சொல்லுக்கு விடையேயில்லை
வல்லமை மின்னிதழில் வந்தது ஜூலை 2 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக