பாரதியே உன்னை மறப்போமா?
வீரத்தின் விளை நிலமே
விடுதலை இயக்கத்தின்ஆதாரமே
நீவாங்கித் தந தசுதந்திரத்தால் நாங்கள்
சுதந்திரமாய் இருக்கிறோம்
உன் பாக்களையும் பாடுகிறோம் எப்படி?
பார் ,பாரதியே பார்
பாருக்குள்ளே நல்ல நாடு--- எங்கள்
(bar)பார் அது நாடு ,என்று
குடும்பம் இரண்டு பட்டால் இங்கு வாழ்வு--அது
இல்லையெனிலனைவருக்கும் தாழ்வு
ஜாதி ,மதங்களில் அரசியல் செய்வார் --அவர்
ஜென்மம் எடுத்ததே அதற்காகத்தான் தேசத்தில்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அக்கிரமங்கள் செய்வதற்குஅச்சமில்லையே
எங்கும் ஊழல் என்பதே பேச்சு ---- நாங்கள்
எல்லோரும் ஏற்றுக்கொள்வதே உறுதியாச்சு
ஓடி விளையாடி காலை உடைச்சுக்காதேபாப்பா-- நீ
உட்கார்ந்துவீடியோகேம் விளையாடு
காக்கை குருவி எங்கள் ஜாதி அதனால்தான்
எங்க ளைப் போல் செல் போன் டவரிலேயே
குடியேறி சமாதியாகிறது
நீ கண்ட கனவு நினைவாயிற்று
கரண்டி பிடித்த காரிகையர்கள்
கணனியில் கலக்குகிறோம்
பாதகம் செய்பவரை கண்டு
பயந்து ஒளிகிறோம்
உன் பாட்டுத் திறத்தால் அக்கிரமம் கண்டு
வீரம் வருகிறது ஆனால் அந்த வீரம்
வஞ்சகர்களால் பேரம் பேசப்பட்டு
ஓரம் போய்விடுகிறது
வீழ்வேனென்று நினைத்தது நீமட்டுமல்ல
விலைவாசியும்தான்
ஆனாலும் உன்னை நாங்கள் மறக்கவில்லை
உன் நினைவு நாளன்று விழா எடுத்து
உன் புகழ் பாடுகிறோம்,பாரதி உன்னை நாங்கள்
மறப்போமா?உன்னை மறப்போமா?
மறுபடி நீ வந்துதான் இந்த நாட்டில் தூர் எடுத்து
சுதந்திரத்தின் அர்த்தத்தை விளக்கவேண்டும்
வருவாயா?பாரதியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக