புதன், 24 செப்டம்பர், 2014

உயிரின் இருப்பு --வல்லமை மின்னிதழ்- 21--5--2014

உயிரின் இருப்பு!


பந்த பாசம்
சொந்தங்கள்
என்று காலம்
காலமாய்
இருந்து வந்த
பாரம்பரியம்
சிதைந்து போனது!

இட நெருக்கடி,
பொருளாதாரச் சூழல்
மனஸ்தாபங்கள் எனக்
குடும்பத்தின்
ஆணிவேர்கள்
காய்ந்து விட்டது!
உறவுச் சங்கிலிகளின்
கண்ணிகள்
ஒவ்வொன்றாய்
அறுந்து போனது!
நீர் நிறைந்து நிறைந்து
காய்ந்து வற்றிப்போன
குட்டையில்
வாழ்ந்ததற்கான
அடையாளமாய்
நண்டு ஓட்டின்
சிதிலங்களும்
உள்கவியும்
வாசனையும்
உயிரின் இருப்பை
உணர்த்தியது
வல்லமை மின்னிதழில் வெளி வந்த கவிதை (21-5-2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக