மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்
ஒரு மனிதன் பிறந்தான்,வாழ்ந்தான் ,இருந்தான்,செத்தான் என்பதுதான் பெரும்பாலோரின் கதை ,.ஆனால் எம்.ஜி.ஆர் அப்படியல்ல ,இளமையில் வறுமையில் வாடினாலும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குவந்தவர், ஒருவன் தான் எடுத்த முயற்சியில் எல்லாம்வெற்றிபெறுவதில்லைஆனால் எம்.ஜி.ஆரொவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றார் .ஒரு தாயின் வளர்ப்பு அவரை மேன்மை அடையச்செய்தது தாயிடம் எல்லையற்ற பாசம் உள்ளவர்,தாயின் கட்டளைப்படி நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க வாரம்பித்தார் .பின் மெல்ல சினிமாவில் சான்ஸ் வர ஆரம்பித்தது அந்த முதல் படம்தான் சதிலீலாவதி ,சினிமாவில் நடிக்க வந்தாலும் ,அவர்தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி குடி ,சிகெரெட் இல்லாமல் இருந்தாரோ,அது போன்று படத்திலும் குடி சிகெரெட் அவர் தொடுவதில்லை அவ்ரது ரசிகர்கள் தன் படத்தைப்பார்த்து கெட்டுப்போகக்கூடாது என்ற உயரிய நோக்கிகிலும்.மிக ஜாக்கிரதையுடனும் சினிமாவி நல்ல விஷயங்களை , நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னதால் மக்களுக்கு அவர் நல்ல குணங்கள் பிடித்துப்போனது மக்கள்மனதில் அவர் நிறைந்தார் தன் படங்களில் கூட நல்லக் கருத்துக்களையே பதிவு பண்ணச்சொல்லி பாடகர்களை வேண்டுவதும் உண்டு ; பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதில்லை உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார் அடிப்படையிலேயே நல்ல குண்ங்களையுடையவர் ஆதலால் அவரை மக்களுக்குப்பிடித்துப்போனது. அவர் நடித்த சினிமா நூறு நாட்கள் ஒட்டி மக்களின் அமோக வவேற்பு பெற்றதால் அறிஞர் அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரிடம் நட்பு கொண்டார் ,அண்ணாவின் கொள்கைகள் எம். ஜி.ஆரூக்கும் பிடித்துப்போனது அதனால் மெல்ல அரசியலுக்கு வந்தார் அரசியல் வாழ்க்கையிலும் அவ்ர் மக்கள் ஆதரவோடு முதல் அமைச்சர் ஆனார் முதலமச்சராக வந்தாலும் அடக்கத்துடன் மக்கள்மத்தியில் நல்ல பெயர் எடுத்தார் , பகைவனுக்கு க்கூட அவ்ர் கருணை காட்டியவ்ர் எம் .ஆர் ராதா சுட்டபோதுகூட அவரை மன்னித்த மாமனிதர் 60 லிருந்து 70 வரை தமிழக மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டிபறந்தவர் மக்கள்திலகம் .தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்றமுதல் நடிகர் அவர் ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவர்து படங்களில் அவ்ரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது உணர்ச்சிகரமான ந்டிப்பையும் அவ்ரிடம் எதிர் பார்க்க முடியாது.ஆனாலும் கூட அவ்ர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும் வெளிப்படுத்தியதால் அவ்ர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார் எம் ஜி ஆர் ஒரு நல்ல மனிதர் ,னல்ல பண்பாளர் . ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர் .அவ்ர் படங்களில் சின்ன குழந்தைகளுக்கூட அறிவுரைகள் கூறியவர்
ஒவ்வொன்றும் 100% உண்மை அம்மா...
பதிலளிநீக்கு