தண்ணீர் வசதி இல்லை
தடையில்லா மின்சாரம் இல்லை
இருப்பினும் விவசாயி பயிரிட்டு
உரமாக்கி அறுவடை செய்தால்
விலை பெற வழியே இல்லை
விளைவிப் பவன் ஒருவன்
விலையை நிர்ணயிப் பவன் ஒருவன்
லாபம் அடைபவன் வேறொருவன்
விவசாயம் செய்பவன் எவனோ
விளையும் பயிருக்கு அவனே
விலையை நிர்ணயம் செய்யும் நாளே
விவசாயி கடனில்லாமல் வாழும் நாள்
விவசாயம் தான் இந்தியாவின் வேர்
விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு
பாரதி சொன்ன காணி நிலம் வேண்டும்
பாரதம் செழித்திட விவசாயி வேண்டும்
கணினியில் நெல் பயிரிட முடியாது
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்
உழவன் வாழ்ந்திடவழி செய் அரசே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக