சனி, 9 மே, 2015

எழுத்துகாம் --மே 7-5-2015 --அறிவியல் ஆளுமை (ஏனைய கவிதைகள்)

அறிவியல் ஆளுமை

அதிசயம் 
ஆனால் உண்மை 
அறிவியல் ஆளுமை 

பெற்றவர்களின் 
மடியில் 
பிள்ளைகளைவிட 
மடிக் கணினிகளே 
அமர்ந்திருக்கின்றன 
அதிக நேரம் 

கன்னியர் ஆடவர் 
இருவர் காதுகளிலும் 
எப்பொழுதும் 
கைபேசிகளே 
இடம் பெற்றிருக்கின்றன 

எங்கே இருக்கிறாய் 
என்று கேட்டால் 
இதோ ந்ம் வீட்டருகேதான் 
என எளிதாக பொய் 
பேசமுடிகிறது 

திருமண பத்திரிக்கையை 
முக நூலில் 
அப்டேட்செய்தால் 
வாட்ஸப்பிலேயே 
மொய் வைக்கப்படுகிறது 

மரணசெய்திகேட்டால் 
முக நூலிலேயே 
ரிப் போட்டு 
ரிலாக்ஸ் 
ஆகிவிடுகிறார்கள் 

ட்விட்டரிலேயே 
பன்ச் டயலாக் போட்டு 
ட்விஸ்ட் அடிக்கமுடிகிறது 

ஆன் லைனிலேயே 
அல்வா ஆர்டர் 
செய்யமுடிகிறது 

செயற்கை முறையில் 
ஆடு ,கோழி குழந்தை 
செய்யமுடிகிறது 

எல்லாம் செய்ய 
முடிந்த அறிவியலால் 
இயற்கையை மட்டும் 
தடுத்து நிறுத்த முடிய வில்லையே ஏன் 

சரஸ்வதிராசேந்திரன் 
மன்னார்குடி

2 கருத்துகள்: