புதன், 28 ஜூன், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --- 8/6/17


Image may contain: 2 people

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 8/06/2017நடந்து முடிந்தபடம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் கவிஞர் மருதூர் மெளஜுன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில் 
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
முகமலரை நீரில் அமிழ்ந்து
மூழ்கி எழுகையில் சிந்தும்
நீர் முத்துக்கள் சிந்து பாட என்
நெஞ்சத்தில் தும்பி பறக்குதடி
கோடையின் வறட்சி நீங்க குளத்து
குளிர்ந்த நீரில் முகம் கழுவல் இயல்புதான்
முகத்தாமரையில் முத்தமிட்டுச் சென்றதோ மீன்கள்
முகம் சிவந்து போகிறதே நாணத்தால்
எண்ணம் ஈர்க்கும் எழில் வடிவே
என்னை ஆட்கொண்ட பேரழகே
ஈர்ப்பினில் ஏற்படும் உன் அழகு
வார்ப்போனின் வலிமை சொல்கிறது
வந்து விடு உன்னைத் தந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக