புதன், 28 ஜூன், 2017

3-5=2017 = நிலாச்சோறு==விடுகவிதை

வணக்கம் கவிஞர்களே
மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்
சுந்தரகவிராயர் எழுதிய இந்த கவிதை தான் விடுகவிதை
இங்கு காணப்படும் ஆயுதமும் தாக்கப்படும் மிருகமும் என்ன...?
மிருகம் வேங்கை ஆயுதம் வேல்
இதற்கு சரியான விடையை முதலில் கவிதை நடையில் சொல்லி
வெற்றியாளர்ஆகிறார் சரஸ்வதி ராசேந்திரன்
இன்றைய விடுகவிதை சற்று வித்தியாசமாக சங்க கால பாடல் ஒன்று அதில் மறைந்துள்ள மிருகத்தையும் அதைக்கொல்ல பயன்படுத்தும் ஆயுதத்தையும் இணைத்து கவிதை படைக்க வேண்டும்
இதுதான் அந்த பாடல்
#மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்
சுந்தரகவிராயர் எழுதிய இந்த கவிதை தான் விடுகவிதை
இங்கு காணப்படும் ஆயுதமும் தாக்கப்படும் மிருகமும் என்ன
வழக்கம் போல 30 வார்த்தைகளுக்கு குறையாமல் கவிதை படைத்து விகடகவியாகுங்கள்
நடுவர் பிருந்தாவனம் பிரியநிலா
ஆளுமையில் அரசன் அவன்
தோளிலே வேலை ஏந்தி
பரியின் மீதமர்ந்து பாய்ந்து சென்றான்
வேட்டையாட கண்டான் அங்கொரு
வேங்கைப்புலியை வேந்தனவன்
வேலை எடுத்து வீசினான் வேங்கை மீது
வேங்கையும் வீழ்ந்து மடிந்தது
வெற்றிப்பெருமிதத்துடன் அரண்மனை சென்றான்
வெற்றி வாகை சூடிய வேந்தனைக்கண்ட
அரண்மனைப்பெண்கள் அரசனுக்கு
ஆலத்தி எடுத்து அமோகமாய் வரவேற்றனர்
ஆயுதம்== –வேல்
மிருகம் ==வேங்கைப்புலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக