புதன், 28 ஜூன், 2017

31-5-17 தமிழமுது கவிச்சாரல்-பூக்களெ சற்று ஓய்வெடுங்கள் அவள் வருகிறாள்

னியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 31--5--17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_பூக்களே_சற்று_ஓய்வெடுங்கள்_அவள்_வருகிறாள்
வெற்றிச் சான்றிதழ் பெறும் #கவிஞர்_சரஸ்வதி_ராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
#நிர்வாகி_கவிஞர்_கவிச்சிகரம்_முகன் நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்

##பூக்களே_சற்று_ஓய்வெடுங்கள்_அவள்_வருகிறாள்

தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
பூக்களுக்கு இன்று விடுமுறை
பூவையவள் வருகின்றாள்
பொன்னழகு மேனியவள்
பூவிதழின் மென்மையவள்
நெஞ்சம் எனும் ஊஞ்சலிலே
கொஞ்சி வரும் தேனருவி
திசைகள் எல்லாம் தடுமாறும்
தேவதை அவள் வருகையிலே
பருவமலர் பூத்த அழகில்
அருவியெல்லாம் ஆர்ப்பரிக்கும்
தென்றல் கூட நிறுத்தி வீசும்
தென்னம் பாளை சிரித்து அழைக்கும்
கவிஞர் படைத்த இலக்கியமோ
கலைமங்கை சீதனமோ
கொஞ்சும் மலர் இதழ் விரிக்கும்
கிறுகிறுக்க வைக்கும் அழகில்
வண்ணமலர் கண்டு மனம் மகிழும்
எண்ணமெல்லாம் அவள் வரவால் துள்ளும்
பூவோடு காற்றும் சேர்ந்து அசைந்தாடுது
பூவை மனமும் அதைக் கண்டு பூபாளம் பாடுது
பூவுக்குள் தேன் வந்து சேர்ந்தது
பூமேனி பன்னீர் பூவாய் தூவுது
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக