புதன், 28 ஜூன், 2017

ஊ.ல..ழ..ள நடப்புச்செய்திகள் கவிதைப்போட்டி==20-5-2017

,,"நடப்புச்செய்திகள் கவிதைப்போட்டி"முடிவுகள்...
(தேதி: 09-05-2017 முதல் 20-05-2017 வரை)
.
ஊ...ல...ழ...ள....நிர்வாகிகள் மற்றும் உங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்ககொள்கிறோம்
நடப்புச் செய்திகள் கவிதைப்போட்டி
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய காதலி==தினமலர் செய்தி
அன்பும் அறமும் உடைத்ததே இல்வாழ்க்கை
அதைவிடுத்து கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்பதேஇன்றைய சாட்சி
காலையில் மாலையில் கடற்கரை சினிமா
சாலையில் சந்து பொந்துகளில் சந்திப்பு
வேலை நேரம் போக ஒன்றாக ஊர் சுற்றல்
அகிலம் முழுவதும் சுற்றி அலுத்துப்போக
அடுத்த நாளிலிருந்து அவளை விடுத்து
அடுத்த மலர் தாவும் மனமும் கொண்டு
பெற்றவர்கள் மனம் கோணாமலிருக்கஅவர்கள்
பார்த்த பெண்ணை மணமுடிக்க விழைய
கோடையிடி கேட்ட நாகம் போல் நெஞ்சு குமுறினாள்
ஆடைகட்டி அலங்காரத்துடன் மகிழ்ச்சியில்
மலர்மாலை அணிந்து மகிழ்ச்சியுடன்மணமகன்
மணமேடையில் அமர்ந்த மகிழ்வான தருணம்
பட பட வென உள்ளே வந்த முன்னாள் காதலி
சட்டென்று கைத்துப்பாக்கியைக்காட்டி
மணமகனை தன் முன்னாள் காதலனை
மற்றவர்கள் திகைத்து நிற்க கடத்திச் சென்றாள்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
சித்தம் தெளிந்து சத்தியம் தோய்ந்திடின்
பித்தம் தெளிந்துவிடும் உன்மத்தம் போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக