திங்கள், 30 மே, 2016

வல்லமை புகைப்படபோட்டி-65

இந்த வாரத்தின் சிறந்த கவிதையாக என் கவிதையை தேந்தெடுத்த திருமதி மேகலாராம மூர்த்திக்கும் வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
காகமே உன்
தாகம் தீர்க்க
தண்ணீரும்
பசிக்கு அன்னமும் இட்டேன்
நீ சனீஸ்வரரின் வாகனமாம்
முன்னோர்களின் சின்னமாம்
நீ கரைந்தால்
விருந்தினர் வருவதாகவும்
நீ வலமாகப் போனால்
காரிய சித்தியாகவும்
உன்னைப்புகழ்ந்து
பாடியிருக்காராம்
காக்கைப்பாடினியார்
இதெல்லாம் எனக்கு
செவிவழி வந்த செய்திதான்
ஒற்றுமைக்கும்
பகிர்ந்துணவுக்கும்
கூடி வாழ்தலுக்கும்
உவமையாகச் சொன்ன
உண்மைத்தகவலுக்காகவும்
உயிர்களுக்கு உதவணும்னுதான்
தண்ணீரும்
அன்னமும் இட்டேன்                                                                                                    
அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
கடையிலிருந்தோ சிறுவர்
கையிலிருந்தோ
இதை பறித்து வந்திருக்கிறாயோ?
வேண்டாம் காகமே!
பறித்து வருவதும்
கவர்ந்து வருவதும் கூட
ஒரு வகையில் திருட்டுத்தானே?
எனக்கு இது வேண்டாம்!
அம்மா திட்டுவாள்
உன் அன்புக்கு நன்றி!

காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக