தடாகம்
செழுங்கவிகள் பூக்கின்ற தடாகம் இது
செந்தமிழ் மணக்கின்ற கூடாரம்
பணத்தவர் இனத்தவர் பார்ப்பதில்லை
குறைகள் எவரும் சொன்னதில்லை
நிறைகள் ஒன்றால் பரிமளிப்பு
வளமான கவிதைகள் படைத்திட
தளமாய் துணை நிற்கும் தடாகம்
புலமைக்கு மதிப்பளிக்கும் பாங்கு கண்டு
களமிறங்கி வருகிறார் கவிஞரெல்லாம்
இனிய தமிழ் காக்கின்ற தடாகத்தொண்டு
என்றும்எவரும் போற்றும் அருந்தொண்டு
கவிஞர்கள் படைப்புகள் யாவும் அழகு
கவியருவி கவிதீபம்விருதுகள் வழங்கிடல்சிறப்பு
இணையே இல்லாத இலக்கிய வட்டம்
துணையே கவிஞரின் கவி ஊற்றுகள்
போற்றிப் பாடுவோம் நாமே இந்த
தடாகப் பெருமைகளைத் தானே
சரஸ்வதி ராசேந்திரன் புனை பெயர்-மன்னை சதிரா
51 வடக்குரத வீதி
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
தடகாத்துக்கு அற்புதமான கவிதை கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
nandri==ruban
பதிலளிநீக்கு