’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும்
பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு
நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம்
தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.---mekala ramamouty
உண்மை உணர்க !உருண்டு திரண்டு
உழன்று சுழன்று
மண்ணில் இருந்து
விண்ணில் பறக்க
முயன்று பார்ப்பது
பள்ளிசெல்லும் வயதில்
துள்ளிப் பறப்பதும்
இயல்புதான் இது
விளையாட்டுதான் !
ஆனால் வாழ்க்கையில்
கெட்ட வழியில்
சொத்து சேர்த்து உயராமல் நல்
முத்தாய் பெயர் பெற
நயம்பட உழைத்தும்
சுயமாய் நேர்பட நின்றும்
உயரம் ஏறி
சிகரம் தொட்டு
உயரும் நிலைதான்
பிறப்பின் சிறப்பே
எந்த நிலையிலும்
உயர உயரப் பறந்தாலும்
ஓர் நாள் பறவை கீழிறங்கும்
உண்மைதனை உணர்க பிள்ளைகளே
படமும் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குநன்றி சே .குமார்--சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு